‘இந்திய அணி பற்றிய பொறுப்பற்ற பேச்சால்..’ பதவியை இழக்கும் முன்னாள் வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி கோப்பையைக் கைப்பற்றியது.

‘இந்திய அணி பற்றிய பொறுப்பற்ற பேச்சால்..’ பதவியை இழக்கும் முன்னாள் வீரர்..

பரபரப்பாக நடந்து முடிந்துள்ள உலகக் கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு கூடுதலாக சில அணிகளுக்கு இருந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கும் ஒரு கட்டத்தில் அந்த வாய்ப்பு இருந்தது. அப்போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாஸித் அலி, “இங்கிலாந்து மற்றும் பிற அணிகளுடன் இந்தியா வேண்டுமென்றே தோற்று பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறாமல் பார்த்துக்கொள்ளும்” எனக் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுபற்றி தற்போது பிசிபி வட்டாரங்கள் கூறும்போது, “பாஸித் அலி ஒரு டெஸ்ட் வீரராக இருந்தவர். வாரியத்தின் பல்வேறு திட்டங்களில் இருந்துள்ள அவர் இதுபோன்ற பொறுப்பற்ற அலட்சியமான கருத்துகளைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். அவருடைய கருத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. இதுபோன்ற ஆதாரமற்ற கருத்தைக் கூறியதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கின்றன.

மேலும் கராச்சி பிராந்திய அணியின் பயிற்சியாளராக அவரை நியமிக்க இருந்ததையும் தற்போது மறுபரிசீலனை செய்யவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ICCWORLDCUP2019, TEAMINDIA, INDVSPAK, VIRATKOHLI, BASITALI