‘உலகக் கோப்பையில் விளையாடக்கூடாது என சொல்லக்கூடாது’.. கருத்து கூறிய முன்னாள் இந்திய கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

‘உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் வீரர்களை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டாம் என்று சொல்லக்கூடாது’ என இந்திய முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

‘உலகக் கோப்பையில் விளையாடக்கூடாது என சொல்லக்கூடாது’.. கருத்து கூறிய முன்னாள் இந்திய கேப்டன்!

புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 40 -க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்கிற அமைப்பு நடத்தியதாக பொறுப்பேற்றதை அடுத்து நேற்று அதிகாலை இந்திய விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்தியது.

இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கட்டுப்பாட்டு அறை முற்றிலுமாக தகர்க்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தானுடன் எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடக்கூடாது என கோரிக்கைகள் எழுந்தன.

முன்னதாக மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அங்கமான கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா(சிசிஐ) அலுவலகத்தில் இருந்த பாகிஸ்தான் பிரதமரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானின் புகைப்படம்  அங்கிருந்து அகற்றப்பட்டது.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இதுகுறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில்,‘பாகிஸ்தானுக்கு எதிராக நம் இந்திய விளையாட்டு வீரர்களை விளையாடக்கூடாது என சொல்லக்கூடாது. ஏனென்றால் அவர்கள் விளையாட்டு வீரர்கள்’ என கபில்தேவ் கூறியுள்ளார்.

INDVPAK, WORLDCUP2019, KAPILDEV