'என்ன ஒரு அடி, 2 ஓவர்ல மட்டும்'... 'இதுவரைக்கும் எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனை'... 'மாஸ் காட்டிய கேப்டன்!!!'
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2020 ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை அடித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையேயான லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்ததையடுத்து, துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் கடைசி வரை தனி ஆளாக நின்று ரன் குவித்தார். மூன்று விக்கெட்கள் வீழ்ந்தாலும், அவர் திட்டமிட்டு விக்கெட் போகாமல் ஆடி ரன் குவித்தார்.
சதம் அடிக்கும் வரை ஃபோர் அடித்து வந்த ராகுல், சதம் அடித்த பின் கடைசி இரண்டு ஓவர்களில் சிக்ஸர்களையும் பறக்க விட்டார். 62 பந்துகளில் சதம் கடந்த அவர் 69 பந்துகளில் 132 ரன்கள் குவித்தார். இதில் 14 ஃபோர், 7 சிக்ஸ் அடங்கும். மேலும் கடைசி இரண்டு ஓவர்களில் அவருடைய அதிரடியால் பஞ்சாப் அணி 26 மற்றும் 23 ரன்கள் குவித்தது. இரண்டு ஓவரில் மட்டும் 49 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது. அதில் ராகுல் மட்டுமே 132 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணி 206 ரன்கள் குவித்த நிலையில், பெங்களூர் அணி வேகமாக விக்கெட்களை இழந்து 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் 132 ரன்கள் குவித்ததன் மூலம் ராகுல் ஐபிஎல் தொடரில் இமாலய சாதனை ஒன்றை செய்துள்ளார். ராகுல் எடுத்த 132 ரன்களே ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் ஒருவர் இதுவரை எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள் ஆகும். அத்துடன் ஐபிஎல் கேப்டன்களில் அதிக ரன்கள், விக்கெட் கீப்பரில் அதிக ரன், UAEயில் அடித்த அதிக டி20 ரன், 4 நாடுகளில் டி 20 சதமடித்த இந்திய வீரர் எனப் பல சாதனைகளை செய்துள்ளார். முன்னதாகவும் அதிவேகமாக ஐபிஎல் தொடரில் 2000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினை முந்தி முதல் இடத்தை பிடித்தார் ராகுல்.
மற்ற செய்திகள்