"நீ எவ்ளோ பெரிய ஆளா வேணா இரு... எனக்கு கவலையில்ல, ஆனா..." - தோல்விக்குப் பின் CSK-வின் நட்சத்திர வீரரை... 'கிழித்து தொங்கவிட்ட' பிரபல வீரர்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூருவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது.
சனிக்கிழமை நடந்த அந்தப் போட்டியில் பெங்களூரின் பேட்டிங் தொடக்கத்தில் கொஞ்சம் மோசமாகவே இருந்தபோதிலும், போகப்போக ஆட்டத்தை அந்த அணி கட்டுக்குள் கொண்டு வந்தது. முதலில் விளையாடிய பெங்களூர் 20 ஓவரில் 169 ரன்கள் எடுக்க, அதன்பின் களமிறங்கிய சென்னை வெறும் 132 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சிஎஸ்கேவின் இந்த தோல்விக்கு அந்த அணி வீரர் அம்பதி ராயுடு மிகவும் பொறுமையாக ஆடியது மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அம்பதி ராயுடுவும், ஜெகதீசனும் பவுண்டரி எல்லைக்கு அருகில் அடித்துவிட்டு சிங்கிள் ஓடியது பெரிய அளவில் கேள்விகளை எழுப்பியது.
அதிலும் 10 ஓவர்களுக்கு பின் இரண்டு ரன்கள் ஓட வாய்ப்பு இருந்தும் கூட ராயுடு மிக மோசமாக சிங்கிள் மட்டுமே எடுத்தார். ரன் ஓடுவதற்கு விருப்பமே இல்லாததுபோலவே அம்பதி ராயுடு ரன் ஓடினார். போட்டியின் 4வது ஓவரில் பேட்டிங் செய்ய வந்த அம்பதி ராயுடு 18வது ஓவரில்தான் அவுட் ஆனார். ஆனால் அவ்வளவு நேரம் பேட்டிங் செய்தும் கூட 40 பந்துகளில் வெறும் 42 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார். இதனால் ராயுடுவின் பேட்டிங் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
இதையடுத்து அம்பதி ராயுடுவின் மோசமான ஆட்டத்தால் கெவின் பீட்டர்சன் அவரை விளாசித் தள்ளியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள கெவின் பீட்டர்சன், "பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் ராயுடு ரன் எடுப்பதற்கு கொஞ்சம் கூட முயற்சிக்கவில்லை. சிஎஸ்கே பேட்டிங் செய்தபோது, 8வது ஓவரில் ஜெகதீசன் இரண்டு ரன்கள் ஓடும்படி கூப்பிட்டும் கூட அம்பதி ராயுடு வரவில்லை. அதிலும் ஜெகதீசன் ஒரு ரன் ஓடி முடித்த பின்புதான் அம்பதி ராயுடு பாதி பிட்ச் தாண்டி இருந்தார். அவரின் இந்த மெதுவான ஓட்டத்தை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது.
அம்பதி ராயுடு கொஞ்சம் விழித்துக்கொள்ள வேண்டும். உலகின் சிறந்த வீரர்கள் எல்லாம் ஐபிஎல்லில் விளையாடுகிறார்கள். அவர்கள் உயிரை கொடுத்து மிக வேகமாக ஓடுகிறார்கள். ஆனால் நீங்கள் இவ்வளவு பெரிய இலக்கை டார்கெட்டாக வைத்துக்கொண்டு இப்படி ஓடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. மற்ற வீரர்களை பார்த்து நீங்கள் எப்போதும் கற்றுக்கொண்டு உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அதே போட்டியில் கோலி போட்டியில் எவ்வளவு வேகமாக ஓடினார் என்பதையும், ஹைதராபாத் போட்டியில் பிரைஸ்டோ எப்படி ஓடினார் என்பதையும் பார்த்து இருப்பீர்கள். அப்படி இருக்கும் போது அம்பதி ராயுடு இப்படி மெதுவாக மைதானத்தில் நடப்பதை பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்