"ஒரு காலத்துல Chasing-ல கலக்கினவரு... இப்ப, என்ன ஆச்சு...?" - 'எல்லாத்துக்கும் தோனிதான் காரணமா?!!'... 'கேதார் ஜாதவ் சறுக்கியது எப்படி???'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணி வீரர் கேதார் ஜாதவ் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்த சீசனில் கடந்த 6 போட்டிகளாக சிஎஸ்கே அணி வீரர் கேதார் ஜாதவின் மோசமான பேட்டிங் தான் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால் இவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் ஜாதவ் ரசிகர்கள் கிண்டல் செய்யும் அளவிற்கு அவ்வளவு மோசமான பேட்ஸ்மேனாக முதலில் இல்லை. 2014ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடி வரும் அவர், யுவராஜ் சிங்கிற்கு பின் இந்திய மிடில் ஆர்டரில் அதிக நம்பிக்கை அளித்த வீரராகவே இருந்தார். 2014-2017 வரை இவரின் கிரிக்கெட் கிராப் மிகவும் சிறப்பாகவே இருந்தது.
ஒருநாள் போட்டிகளில் 50+ ரன்களை தனது சராசரியாக வைத்திருந்த ஜாதவ், பல போட்டிகளிலும் இந்திய அணியின் சேஸிங்கில் உதவியுள்ளார். தொடக்க காலத்தில் ஜாதவ், இங்கிலாந்திற்கு எதிராக சேஸிங்கின் போது வெறும் 76 பந்தில் 120 ரன்களும், 75 பந்தில் 90 ரன் எடுத்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா ஆடிய தொடரில் சேஸிங்கில் 60, 50 என கடைசி கட்டத்தில் இறங்கி இவர் அதிரடி காட்டியும் இருக்கிறார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் 110 ஆக இருக்கும் இவருடைய ஸ்டிரைக் ரேட், சேஸிங்கின்போது, 130-140 என இருக்கும்.
இதுபோல 2017 வரை நல்ல பார்மில் இருந்தவர் அதன்பின் கடுமையான காயங்கள், ஆபரேஷன்கள் காரணமாக அவதிப்பட்டு, 2018ஆம் ஆண்டு பார்ம் அவுட் ஆனார். அதுவரை சேஸிங்கில் சிறப்பாகவே பேட்டிங் செய்து வந்த ஜாதவ், 2018 ஐபிஎல் தொடரில் சேஸிங்கில் மிக கடுமையாக சொதப்ப தொடங்கினார். அப்போதும் 2018 ஐபிஎல் சீசனில் சில முறை சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு கூட இவர் காரணமாக இருந்தார். ஒரு முறை காலில் அடிப்பட்டு பெவிலியன் சென்றவர் மீண்டும் திரும்பி வந்து ஆடி சிஎஸ்கேவை வெற்றி பெற வைத்துள்ளார். பல முறை 9வதாக இறங்கும் வீரருடன் இணைந்து சிஎஸ்கேவை வெற்றிபெற வைத்துள்ளார். ஆனால் 2019க்கு பின் இவருடைய சரிவு வேகமாக அதிகரித்து மிக மோசமாக பார்ம் அவுட் ஆனார்.
இவருடைய பேட்டிங் ஸ்டைல் டி20 வீரர் போல இல்லாமல் டெஸ்ட் வீரர் போல மாறியது. இதையடுத்து ஒருபக்கம் தோனியின் ஸ்டைலை பின்பற்றி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடாமல் கடைசி இரண்டு ஓவரில் அடிக்கலாம் என நினைத்துதான் ஜாதவ் இப்படி மோசமாகிவிட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. மறுபக்கம் ஜாதவின் சரிவிற்கு தோனி காரணம் இல்லை, 2018ல் அவருக்கு ஏற்பட்ட காயத்தால் பார்ம் அவுட் ஆனதே காரணம் எனவும் கூறப்படுகிறது. இதனால் குறுகிய கால சரிவிற்காக அவரை இவ்வளவு மோசமாக விமர்சிக்கக் கூடாது எனவும், அவருக்கான போட்டி ஒன்று கிடைத்தால் ஜாதவும் வாட்சன் போல பார்மிற்கு வந்துவிடுவார் எனவும் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்