'வரம்பு மீறி கலாய்த்த சேவாக்'... 'கேட்ட மத்தவங்களே கடுப்பான போதும்'... 'பக்குவமாக பதில் சொன்ன ஸ்டார் பிளேயர்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தாண்டு ஐபிஎல் தொடர் பரபரப்புக்கு பஞ்சமின்றி மிகவும் விறுவிறுப்பாகவும், வெற்றிகரமாகவும் நடந்துமுடிந்துள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதலில் தொடர் தோல்விகளை சந்தித்துவந்த பஞ்சாப் அணி அதன்பின் அடுத்தடுத்த போட்டிகளில் வென்று அசத்தியது. இருப்பினும் பிளே ஆப் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்த தொடரில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிரடி வீரரான மேக்ஸ்வெல், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணிக்காக விளையாடினார். முன்னதாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல், 13 போட்டிகளில் விளையாடி வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மேலும் அதிரடி ஆட்டடத்துக்கு பெயர் பெற்ற மேக்ஸ்வெல் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. இதையடுத்து அவர் மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த ஆண்டுக்கான ஏலத்தில் மேக்ஸ்வெல் 10.75 கோடிக்கு எடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சொதப்பியது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் தன்னுடைய யூ-டியூப் சேனலில் பேசியபோது, மேக்ஸ்வெல்லை விலையுயர்ந்த சியர்ஸ்லீடர் எனவும், அதிகம் ஊதியம் பெற்று விடுமுறையில் இருப்பவர் எனவும் குறிப்பிட்டு வரம்பு மீறி கலாய்த்தார். சேவாக்கின் இந்தக் கருத்திற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில், தற்போது மேக்ஸ்வெல் அதுகுறித்து பேசியுள்ளார்.
ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்தபோது சேவாக் கருத்து குறித்து பேசியுள்ள மேக்ஸ்வெல், "விரு என்னை விரும்பாததை மிகவும் வெளிப்படையாக பேசுகிறார்.அது பரவாயில்லை. அவர் விரும்புவதை சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. இதுபோல பேசுவதாலேயே தான் அவர் ஊடகங்களில் இருக்கிறார். நான் அதை கடந்து போகிறேன். இதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறேன். இது போன்ற விமர்சனங்களைக் கையாள்வதில் நான் கைத்தேர்ந்துவிட்டேன் என நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்