"அவர டீம்ல சேர்த்து... இன்னும் கொஞ்சம் ஊக்குவிச்சா கண்டிப்பா"... - "என்னது இன்னைக்குமா...??? ஆனாலும் இவ்வளவு நம்பிக்கை கூடாது!"... 'கவலையில் CSK ரசிகர்கள்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் இன்று சென்னை - பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

"அவர டீம்ல சேர்த்து... இன்னும் கொஞ்சம் ஊக்குவிச்சா கண்டிப்பா"... - "என்னது இன்னைக்குமா...??? ஆனாலும் இவ்வளவு நம்பிக்கை கூடாது!"... 'கவலையில் CSK ரசிகர்கள்!!!'...

துபாயில் இன்று நடைபெற உள்ள போட்டியில் பெங்களூர் மற்றும் சென்னை அணிகள் மோதவுள்ள நிலையில், சென்னை அணி மொத்தம் 6 போட்டிகளில் ஆடி 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணமாக அணியின் பேட்டிங் ஆர்டர் பார்க்கப்படும் நிலையில், அந்த அணியின் ஓப்பனிங் வீரர்கள் தற்போது பார்மிற்கு வந்துவிட்டனர். வாட்சன் - டு பிளசிஸ் இருவரும் நல்ல பார்மில் உள்ளனர். இன்னொரு பக்கம் ராயுடு சிஎஸ்கே அணிக்காக ஒன் டவுன் இறங்கி நன்றாக ஆடி வருகிறார்.

IPL CSKvsRCB Dhoni Needs To Encourage Kedar Jadhav Not Drop Him Sehwag

ஆனால் சிஎஸ்கே அணியில் ரெய்னா இல்லாத காரணத்தால், அதன்பின் 4வது இடத்தில் இறங்கும் வீரர் யார் என்பதில் தான் நிறைய குழப்பங்கள், சந்தேகங்கள் உள்ளது. முதல் 2 போட்டிகளில் சிஎஸ்கே அணியில் 4வது இடத்தில் ஆடிய கேதார் சொதப்ப, அதன்பின் 4வது இடத்தில் தோனி களமிறங்கினார். கடந்த 3 போட்டிகளில் 2 போட்டியில் 4வது இடத்தில் தோனி தானே விளையாடியும் அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. இந்த சூழலில் இன்றைய போட்டியிலும் தோனியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் இருக்காது எனவே கூறப்படுகிறது.

IPL CSKvsRCB Dhoni Needs To Encourage Kedar Jadhav Not Drop Him Sehwag

மேலும் சிஎஸ்கேவின் தொடர் தோல்விகளுக்கு ஒரு காரணமாக உள்ள கேதார் ஜாதவை அணியில் இருந்து நீக்க வேண்டுமெனவும், அவருக்கு பதில் வேறு வீரரை களமிறக்க வேண்டுமெனவும் ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதையடுத்து அவர் ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என ஒரு புறம் கூறப்பட்டாலும், கடந்த 6 போட்டிகளிலும் ஜாதவை நம்பியது போலவே இன்றைய போட்டியிலும் மீண்டும் தோனி அவரை நம்பி வாய்ப்பளித்து விடுவாரோ என்ற கவலையும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வீரேந்திர சேவாக் சில போட்டிகளில் மோசமாக விளையாடியுள்ள போதும் கேதார் ஜாதர் மீண்டும் நன்றாக விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனவும், அவரை அணியில் சேர்த்து தோனி அவரை இன்னும் கொஞ்சம் ஊக்குவிக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்