'நெகிழ்ந்துபோய் பேசிய தமிழக வீரர்'... 'சிம்பிளா தோனி சொன்ன பதிலால்'... 'இங்கிலாந்து வரைக்கும் வைரலான அந்த 'தமிழ்' வாசகம்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வில்லையென தோனி சொன்ன பதிலால் தமிழ் வாக்கியம் ஒன்று வெளிநாடுகள் வரை வைரலாகி வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடர் பல அதிரடி திருப்பங்களுடன் நடந்துவரும் நிலையில், இன்னும் இரண்டு லீக் ஆட்டங்களே மீதம் உள்ளன. ஆனால் இதுவரை ஒரே ஒரு அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து இன்று மற்றும் நாளை நடக்கும் போட்டியில்தான் பிளே ஆப் செல்லும் மற்ற அணிகள் எது என உறுதியாகும். முன்னதாக இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று விளையாடிய சிஎஸ்கே பஞ்சாப்பை தோற்கடித்து வெற்றியுடன் தொடரை முடித்துக்கொண்டது.
இந்நிலையில் நேற்று போட்டிக்கு முன்பாக பேசிய கேப்டன் தோனி, ஐபிஎல் தொடரில் இருந்து தான் ஓய்வு பெற போவதில்லை என்பதை உறுதி செய்தார். தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெற வாய்ப்புள்ளது என நிறைய வதந்திகள் பரவிய நிலையில் தற்போது அவர் தன் முடிவை திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதைக்கேட்டு மகிழ்ந்துபோன அவருடைய ரசிகர்கள் தோனியின் இந்த முடிவை பாராட்டி, கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் நியூசிலாந்து வீரர்கள், இங்கிலாந்து வீரர்கள், ஆஸ்திரேலிய வீரர்கள் எனப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று தோனி இந்த முடிவை அறிவித்த பின் அந்த செய்தியோடு சேர்ந்து இணையத்தில் "தல தலதான்" என்ற தமிழ் வாசகமும் வைரலாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் தோனியை புகழ இந்த வாசகத்தை பயன்படுத்துவது வழக்கமெனும் சூழலில், முன்னதாக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி கூட தோனியை புகழ இந்த வாசகத்தை பயன்படுத்தி இருந்தார். இதையடுத்து நேற்று இங்கிலாந்து பெண்கள் அணி கிரிக்கெட் வீரர் கேட் கிராஸ் தொடங்கி பல கிரிக்கெட் வீரர்கள் இந்த தல தலதான் என்ற தமிழ் வாசகத்தை டிவிட் செய்துள்ளனர். தோனியின் முடிவை பாராட்டும் வகையிலும் இந்த வாசகத்தை அவர்கள் பகிர்ந்ததால் டிவிட்டரில் அது நேற்று வைரலாகியுள்ளது.
We shall come back stronger in 2021. Win or lose, தல தல தான்! 💛 @ChennaiIPL #IPL2020 #Yellove
— Kate Cross (@katecross16) November 1, 2020
மற்ற செய்திகள்