‘அப்டி என்ன தப்பு பண்ணிட்டேன்?’.. ‘பட்லர் அவுட் சர்ச்சை’.. அஸ்வின் கூறும் புது விளக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் வீரர் பட்லரை அவுட் செய்தது குறித்து அஸ்வின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
ஐபிஎல் 2019 டி20 லீக்கின் அடுத்த போட்டி நேற்று(25.03.2019) ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய இரு அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், கிறிஸ் கெய்லும் களமிறங்கினர். இதில் ராகுல் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கெய்ல் மற்றும் மயநாக் அகர்வால் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இதில் கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் 79 ரன்களை அடுத்து அதிரடி காட்டினார். இதில் 112 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கெய்ல் படைத்துள்ளார். 20 ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை பஞ்சாப் எடுத்தது.
இதனை அடுத்து 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் விளையாடியது. அப்போது 12 -வது ஓவரை வீசிய பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், பந்தை வீசுவதற்கு முன்னாள் கிரீஸை தாண்டிய ராஜஸ்தான் வீரர் பட்லரை அஸ்வின் அவுட் செய்தார். இதனால் பட்லருக்கும், அஸ்வினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 3 -வது நடுவர் இதனை அவுட் என அறிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து போட்டி முடிந்த பின் அஸ்வின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில்,‘மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்ததை பெரிதாக விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. நான் ஓடி வந்து பந்து வீசும் போது, பட்லர் கிரீஸை தாண்டி இருந்தார். அவர் என்னை கவணிக்கவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்தேன். திட்டமிட்டு அவரை அவுட் செய்யவில்லை. கிரிக்கெட்டின் விதிகளின் படியே நான் நடந்துள்ளேன். இதுபோன்ற நிகழ்வு இயல்பாக நடக்ககூடிய ஒன்றுதான்’ என அஸ்வின் கூறியுள்ளார்.
"My actions were within cricket's rules, can't be called unsporting."
— IndianPremierLeague (@IPL) March 25, 2019
- @ashwinravi99 responds to accusations of him unfairly running out @josbuttler. #RRvKXIP #VIVOIPL pic.twitter.com/ygOmyGTzCL