"இதெல்லாம் ரொம்பவே தப்பு"... 'IPL ரசிகர்களுக்கு பெரிய ஷாக்காக கொடுத்த அதிரடி வீரர்'... 'வெளிப்படையாகவே வெச்சு செஞ்ச பிரபலம்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடியது பற்றி வாசிம் ஜாபர் நகைச்சுவையாக செய்த ட்வீட் வைரலாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் முதல் போட்டியில் 374 ரன்களையும், இரண்டாவது போட்டியில் 389 ரன்களையும் ஆஸ்திரேலிய அணி குவித்தது. இந்த 2 போட்டிகளிலும் இந்தியா 300 ரன்களுக்கு மேல் எடுத்தபோதும் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்களும், இரண்டாவது போட்டியில் 29 பந்துகளில் 63 ரன்களும் எடுத்து அதிரடி காட்டினார்.
முன்னதாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியால் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல் தொடரில் மொத்தமாகவே 108 ரன்கள் எடுத்து கடும் விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால் ஐபிஎல் தொடரில் அப்படி சொதப்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேக்ஸ்வெல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பழைய பார்முக்கு திரும்பி சிக்ஸர் மழை பொழிந்தார். இதுபற்றி சில நாட்களுக்கு முன் வேடிக்கையான மீம் ஒன்று கூட வைரலானது.
பஞ்சாப் அணிக்காக மோசமாக விளையாடிய ஜிம்மி நீஷம், மேக்ஸ்வெல் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக அதிரடியாக விளையாடியதை கே.எல்.ராகுல் சோகமாக பார்ப்பது போல அந்த மீம் பகிரப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்திருந்த மேக்ஸ்வெல், நான் பேட்டிங் செய்தபோதே அதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டேன் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாபர், "இது ஒரு குற்றம்" என மேக்ஸ்வெல்லை குறிப்பிட்டு வேடிக்கையாக ஒரு மீமை பகிர்ந்திருந்தார். இதை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
.@Gmaxi_32 #AusvInd pic.twitter.com/XG2ZHSXNA8
— Wasim Jaffer (@WasimJaffer14) November 29, 2020
மற்ற செய்திகள்