'என்னது!... அடுத்த போட்டியிலுமா???'... 'அவரு தரமான வீரர் தான், ஆனா'... 'உறுதியாக சொல்லும் ஆஸி. வீரர்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் இந்திய வீரர் பிரித்வி ஷாவின் ஆட்டம் குறித்து பேசியுள்ளார்.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததையடுத்து இந்திய அணி வீரர்கள் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், அவர்களில் இளம் தொடக்க வீரர் பிரிதிவி ஷா மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த முறை சரியான பார்மில் இல்லாத பிரிதிவி ஷா அணியில் தேர்வு செய்யப்பட்டு முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 0, 4 ரன்களே எடுத்து பெரும் ஏமாற்றமளித்துள்ளார். இதையடுத்து இவருக்குப் பதிலாக ராகுலையோ, ஷுப்மன் கில்லையோ கொண்டு வர வேண்டுமென குரல்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் பிரித்வி ஷா பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ், "இந்திய பேட்ஸ்மென்களுக்கு நான் எந்த ஒரு யோசனைகளையும் இப்போது வழங்க மாட்டேன். தொடர் முடிந்தவுடன் தான் வழங்குவேன். பிரிதிவி ஷா என்ன மாதிரியான பார்மில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. இப்போது அவரை எதிர்த்து ஆடுவதால் அவருக்கு நான் எந்த ஆலோசனைகளையும் வழங்க மாட்டேன். அவர் தொடர்ந்து ரன்கள் எடுக்காமல் இருப்பதையே விரும்புகிறோம், அவர் எடுக்க மாட்டார் என்றும் நம்புகிறோம். இந்தியாவுக்கு பிரிதிவி ஷா ஆடுகிறார் என்றால் நிச்சயம் ஷா ஒரு தரமான வீரராகவே இருக்க வேண்டும். தொடர் முடிந்தவுடன் அவருக்கு அறிவுரை வழங்குவேன், இப்போது அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்