‘தல’ தோனியின் புத்திசாலித்தனமான முடிவு.. வாயைப்பிளந்த ஆஸ்திரேலிய பௌலர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தோனியின் ஆட்டத்தை, ஆஸ்திரேலிய பௌலர் ஆடம் ஸாம்பா வியந்து பார்த்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக விசாகப்பட்டிணத்தில் நடந்த ஆஸ்திரேலியவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று(27.02.2019) பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தாவனும், கே.எல்.ராகுலும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இதில் ராகுல் 26 பந்துகளில் 47 ரன்கள் அடித்து அசத்தினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் தோனியின் கூட்டணி 49 பந்துகளில் 100 ரன்கள் அடித்து வீளாசியது. இதில் தோனி 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 38 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19. 4 ஓவர்களில் 194 ரன்கள் அடுத்து அபார வெற்றி பெற்றது. இதில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 ரன்கள் அடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தார். இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றதன்மூலம் 2-0 என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா வீசிய 12 -வது ஓவரின் 2 -வது பந்தில் தோனியை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஹேண்ட்ஸ்ஹோம்ப் ஸ்டெம்பிங் செய்ய முயற்சித்தார். அப்போது தோனி பந்தை மிஸ் பண்ணினாலும் பரவாயில்லை என 2.14 மீட்டர் அகலத்திற்கு தனது காலை எளிதாக விரித்து கிரீஸை தொட்டார். தோனியின் இந்த திறமையைப் பார்த்த ஆஸ்திரேலிய பௌலர் ஆடம் ஸாம்பா வாயைப் பிழந்து பார்த்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
How's that for a stretch from @msdhoni 😮😮
— BCCI (@BCCI) February 27, 2019
📹📹https://t.co/9hYmrJBmii #INDvAUS pic.twitter.com/MXvXIvov0G