உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாட தடை கோரிய பிசிசிஐ.. நிராகரித்த ஐசிசி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தீவிரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானுடனான முரண், அபினந்தன் விடுதலை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டமானது துபாயில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மிக முக்கியமான பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாட தடை கோரிய பிசிசிஐ.. நிராகரித்த ஐசிசி!

முன்னதாக இந்தியா மீதான பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலால், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான முரண்பாடுகள் எழுந்தன. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவது தொடர்பான பலதரப்பட்ட கருத்துக்களும் எழுந்தன. பலரும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுவதில் இருக்கும் நன்மை, தீமைகளை பேசத் தொடங்கினர்.

ஆனால் இந்த கூட்டத்தில் அதைப்பற்றிய விவாதங்கள் எதுவும் எழுப்பப் படவில்லை என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாமது பயங்கரவாதத்துக்கு துணைபோவதாக பாகிஸ்தான் மீது எழுந்த குற்றச் சாட்டுகளால் அந்நாட்டு கிரிக்கெட் அணியினரை ஐசிசி விளையாட்டுப் போட்டிகளில் அனுமதிப்பது தொடர்பான கேள்விகளோ , பேச்சுவார்த்தைகளோ எழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவியதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கு உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு தடை விதிப்பது தொடர்பான, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி  நிராகரித்துள்ளதோடு, பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் விளையாடுவதற்கான தடை விதிக்கவும் மறுத்துள்ளது.

PULWAMATERRORATTACKS, INDIA, PAKISTAN, ICC, BCCI, CRICKET