'ரோஹித் ஆடுவாரா மாட்டாரா???'... 'தொடர் சர்ச்சைகளுக்கு நடுவே திடீர் திருப்பமாக'... 'மௌனம் கலைத்த கங்குலி!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறுவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி இறுதியாக மௌனம் கலைத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இந்த தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய அணி 3 ஒரு நாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்கான 3 விதமான இந்திய அணிகளுக்குமான வீரர்கள் கடந்த 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.
முன்னதாக பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டதால் அவர் கடந்த சில போட்டிகளில் விளையாடவில்லை. மேலும் காயம் காரணம் காரணமாக அவர் இனி மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட மாட்டார் எனவே கூறப்படுகிறது. மேலும் காயத்தை காரணமாகக் கூறி அவர் ஆஸ்திரேலிய தொடர்க்கான இந்திய அணியிலும் சேர்க்கப்படவில்லை.
ஆனால் ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்படாத சில நிமிடங்களிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா வலைப்பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்டது. ரோஹித் சர்மா காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், அவர் பயிற்சி செய்த வீடியோ வெளியானது சர்ச்சையையும், சந்தேகத்தையும் கிளப்பியது.
இதையடுத்து ரோகித் சர்மா வேண்டுமன்றே புறக்கணிக்கப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழ, அவருடைய உடல்நிலை குறித்து வெளிப்படையாக ரசிகர்களுக்கு பிசிசிஐ தெரிவிக்க வேண்டுமென முன்னாள் வீரர் கவாஸ்கர் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையிலேயே தற்போது ரோஹித் சர்மா அணியில் இடம்பெறாதது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியுள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள கங்குலி, "இஷாந்த் சர்மா மற்றும் ரோஹித் சர்மாவை கண்காணித்துவருகிறோம். ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய தொடருக்கு பிட்டாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவருடைய விருப்பம். அவர் காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதி பெரும் பட்சத்தில் தேர்வாளர்கள் அவரை அணியில் சேர்ப்பது பற்றி கண்டிப்பாக பரிசீலிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்