சிக்ஸ் லைன் உள்ள கேட்ச்?.. அவுட்டா சிக்ஸரா என குழம்பிய ரசிகர்கள்.. உண்மையில் நடந்தது என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் ஐபிஎல் டி 20 லீக் போட்டிகள் நடைபெறுவது போல, ஆஸ்திரேலியாவில் கடந்த பல ஆண்டுகளாக புகழ்பெற்ற பிக்பேஷ் பிரீமியர் லீக் டி20 தொடர் நடந்து வருகிறது. தற்போது ஆஸ்திரேலியா நாட்டின் பல இடங்களில் பிக் பேஷ் தொடர் நடைபெற்று வரும் சூழலில், போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட கேட்ச் தொடர்பான வீடியோ தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.

சிக்ஸ் லைன் உள்ள கேட்ச்?.. அவுட்டா சிக்ஸரா என குழம்பிய ரசிகர்கள்.. உண்மையில் நடந்தது என்ன??

Also Read | ரிஷப் பண்ட் உயிரை காப்பாத்தியவருக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய கவுரவம்..! முழு தகவல்..!

பிக் பேஷ் தொடரின் 25வது லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரஸ்பேன் ஹீட் அணி, 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் ஆரம்பத்தில் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்த வண்ணம் இருந்தது. ஆனாலும் கடைசி கட்டத்தில் சில விக்கெட்டுகள் விழ, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி, 209 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

Big Bash League fielder catch outside boundary line video viral

இதனால் பிரிஸ்பேன் ஹீட் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி வீரர் ஜோர்டன் சில்க் அவுட் ஆன விதம் தான் தற்போது பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது.

இலக்கை நோக்கி சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஆடிக் கொண்டிருந்த போது, 19 ஆவது ஓவரில் ஜோர்டன் சில்க் அடித்த பந்து, நேராக சிக்சர் லைனை நோக்கிச் சென்றது. அப்போது அங்கே நின்ற மைக்கேல் நசீர் முடிந்த அளவுக்கு தாவி பந்தை பிடித்தார். அதே வேளையில் பேலன்ஸ் செய்ய முடியாததால் பந்தை மேலே தூக்கிப் போட்டு விட்டு பின்னர் பவுண்டரி எல்லைக்குள் சென்றார். ஆனால் பந்து லைனுக்கு வெளியே போகாமல் சிக்ஸரை நோக்கி வந்தது.

Big Bash League fielder catch outside boundary line video viral

அந்த சமயத்தில், பவுண்டரி கோட்டிற்குள் இருந்த நசீர், அங்கேயே காலை அந்தரத்தில் தூக்கிய படி பந்தை மேலே போட்டு, மீண்டும் வேகமாக வெளியே ஓடி வந்து கேட்ச் எடுத்தார். பவுண்டரி லைனை தாண்டி நசீர் கேட்ச் எடுத்தது சற்று குழப்பத்தை உண்டு பண்ணி இருந்தது. சிக்ஸர் லைனுக்கு வெளியே போய் கேட்ச் எடுத்தாலும் கால்கள் தரையில் படாததால் இது அவுட் என நடுவர் அறிவித்தார். ஆரம்பத்தில் இது அவுட்டா அல்லது சிக்ஸரா என்ற குழப்பங்கள் உருவாகி கடும் விவாதங்களும் கிளம்பி இருந்தது. அதே வேளையில், கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு தான் இது அவுட் கொடுக்கப்பட்டது என்றும் சில கிரிக்கெட் பிரபலங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

Also Read | "இப்போ எப்படி பிரச்சனை வருதுன்னு பாக்குறேன்".. TTF வாசனின் புதிய சவால்.. ட்ரெண்டாகும் வீடியோ..!

CRICKET, BIG BASH LEAGUE, BOUNDARY LINE

மற்ற செய்திகள்