நியூஸிலாந்து: மசூதியில் நுழைந்து சரமாரியாக துப்பாக்கி சூடு .. 40 பேர் பலியான பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்து நாட்டில் உள்ள மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

நியூஸிலாந்து: மசூதியில் நுழைந்து சரமாரியாக துப்பாக்கி சூடு .. 40 பேர் பலியான பயங்கரம்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று(15.03.2019) வெள்ளிக்கிழமை என்பதால் நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் நகரில் அமைந்துள்ள மஸ்ஜித் அல் நூர் என்ற மசூதியில் இன்று காலை சுமார் 300 -க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

அப்போது பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் சிலரும் அந்த மசூதிக்கு தொழுகை செய்ய, தங்கியிருந்த ஓட்டலில் இருந்து ஒரு பேருந்தில் சென்றுள்ளனர். பேருந்தில் இருந்து மசூதிக்குள் நுழையும் போது திடீரென மசுதியில் உள்ளே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதில் பலரும் ரத்தவெள்ளத்தில் தரையில் கிடந்துள்ளனர்.

இதனைப் பார்த்த பங்களாதேஷ் வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அங்கிருந்து தப்பி பத்திரமாக ஓட்டல் அறைக்கு சென்றுள்ளனர். துப்பாக்கி சூடு பற்றி தெரிவித்த பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பால்,‘இந்த அனுபவம் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியது. அணி வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பலரும் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை நடைபெற இருந்த நியூஸிலாந்துக்கு எதிரான 3 -வது டெஸ்ட் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. நியூஸிலாந்தின் புகழ்பெற்ற மசூதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மற்றொரு மசூதியில் இதுபோன்ற பயங்கர துப்பாகி சூடு நடந்துள்ளது. தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இயந்திரத் துப்பாக்கியுடன் மசூதியில் நுழைந்த ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இது தொடர்பாக பெண் உட்பட 4 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். இதில் 40 பேர் இறந்திருப்பதாக  நியூஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள கல்லூரி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

NEWZEALANDSHOOTING, BANGLADESHCRICKETTEAM, CHRISTCHURCHMOSQUEATTACK