LIGER Mobile Logo Top

நடிகையின் மரண வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்.. மருத்துவர்கள் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.. 2 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த திங்கட்கிழமை மரணமடைந்த சோனாலி போகட்டின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் இருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்திருக்கிறது கோவா போலீஸ். இது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகையின் மரண வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்.. மருத்துவர்கள் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.. 2 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்..!

Also Read | திடீர்னு கேட்ட சத்தம்.. கடலுக்கடியே உள்ள சுரங்க பாதையில் சிக்கிய மக்கள்.. கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் விவரமே தெரியவந்திருக்கு..!

சோனாலி போகட்

ஹரியானாவை சேர்ந்த சோனாலி போகட், தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து, டிக்டாக் செயலி மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான சோனாலி போகட், ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14 ஆவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக, மக்கள் மத்தியில் இன்னும் பிரபலம் ஆனார் சோனாலி. அது மட்டுமில்லாமல், பாஜக கட்சியில் இணைந்த சோனாலி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.

Sonali Phogat Autopsy Report released police filed case against 2 men

பெரும் சோகம்

41 வயதான சோனாலி சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்ததாக தெரிகிறது. அப்போது உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. முன்னர் இதுபற்றி பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்,"இந்த விஷயத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். காவல்துறை தலைவர் இந்த விஷயத்தில் நேரடியாக ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பிரேத பரிசோதனை அறிக்கைகள் முதலில் அனுப்பப்படும். முதற்கட்ட அறிக்கையின்படி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது" எனக்கூறியிருந்தார்.

Sonali Phogat Autopsy Report released police filed case against 2 men

வழக்கு பதிவு

இந்நிலையில், தற்போது சோனாலி போகட்டின் உடற்கூறாய்வு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், அவரது உடலில் பல காயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து, கோவா மாநில காவல்துறையினர் சோனாலியின் உதவியாளராக இருந்த சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் வாசி ஆகிய இருவர்மீதும் கொலை வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். முன்னதாக சோனாலியின் சகோதரர் ரிங்கு சிங்  இந்த இருவர்மீதும் காவல்துறையில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Sonali Phogat Autopsy Report released police filed case against 2 men

சோனாலி போகட் மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், கோவா போலீசார் இவர்மீது வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "ஏதோ தப்பா நடக்குது".. உயிரிழந்த நடிகை இறுதி நிமிடத்தில் போனில் சொன்ன விஷயம்.. சகோதரி வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்..!

POLICE, SONALI PHOGAT, SONALI PHOGAT AUTOPSY REPORT, CASE FILED, BIGG BOSS SONALI PHOGAT, BJP LEADER SONALI PHOGAT

மற்ற செய்திகள்