ஒரே ஒரு ஓட்டுக்காக.. 39 கி.மீ தொலைவு கடந்து வாக்குச்சாவடி.. அசத்திய தேர்தல் ஆணையம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅருணாச்சலத்தில் ஒரே ஒரு வாக்காளருக்காக தனியாக வாக்குச்சாவடி அமைத்த தேர்தல் ஆணையத்தின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுவருகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில் வரும் ஏப்ரல் மாதம் 11 -ம் தேதி மக்களவை மற்றும் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக வாக்குச்சவடிகள் அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முழுவதும் மலைப்பிரதேசமான இங்கு வாக்குச்சவடி அமைத்து தேர்தல் நடத்துவது என்பது சவலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒரே ஒரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி அமைத்து தேர்தல் ஆணையம் அசத்தியுள்ளது.
அருணாசலப்பிரதேசம், அஞ்சவ் மாவட்டத்தின் தலைநகரான ஹயுலியாங்கிலிருந்து சுமார் 39 கி.மீ தொலைவில் மலோகம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் பிழைப்புத் தேடி பல்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மீதி இருக்கும் சில குடும்பங்களும் தங்களது பெயர்களை பக்கத்து ஊரில் உள்ள வாக்குச்சவடிக்கு மாற்றியுள்ளனர்.
ஆனால் சொகேலா என்னும் 39 வயது பெண்மணி மட்டும் வேறு வாக்குச்சவடிக்கு பெயரை மாற்றத் தாமதமாகிவிட்டதால் அப்படியே மாற்றாமல் விட்டுள்ளார். அதனால் இவரின் ஒரு வாக்குக்காக வாக்குச்சவடி அமைக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கு முன்பு கடந்த 2014 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் சொகேலாவும் அவரது கணவர் ஜனில் ஆகிய இரு வாக்காளர்களுக்காக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. ஆனால் ஜனில் வேறு வாக்குச்சவடிக்கு தனது பெயரை மாற்றிவிட்டார். அதனால் சொகேலாவின் ஒரு ஓட்டுக்காக தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி அமைத்துள்ளது.