'துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி'...மரியாதை செய்த 'பிரதமர்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

'துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி'...மரியாதை செய்த 'பிரதமர்'!

சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில்,நாடு முழுவதும் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து நடப்பு நிதியாண்டிலேயே இந்த திட்டத்தை  தொடங்க திட்டமிட்டு, அதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3 தவணைகளாக இந்த நிதியினை வழங்க திட்டமிட்ட மத்திய அரசு,இதற்காக 1 கோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற விழாவில்,முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.இதனையடுத்து பிரயாக்ராஜ் சென்று கும்பமேளாவில் பிரதமர் மோடி புனித நீராடி வழிபாடு செய்தார். இதனைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் கும்பமேளா இடத்தை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

NARENDRAMODI, PRIME MINISTER, PM-KISAN SCHEME, KUMBH