'புல்வாமா தாக்குதலுக்கு காரணமான கார் உரிமையாளர் கண்டுபிடிப்பு'.. வெளியான பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புல்வாமா தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் பயன்படுத்திய காரின் உரிமையாளரை கண்டிபிடித்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

'புல்வாமா தாக்குதலுக்கு காரணமான கார் உரிமையாளர் கண்டுபிடிப்பு'.. வெளியான பரபரப்பு தகவல்!

விடுமுறையை முடித்துவிட்டு கடந்த 14 -ம் தேதி தமிழகம் உள்பட பல மாநிலங்களை சேர்ந்த 2500 சிஆர்பிஎப் வீரர்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் பயணம் செய்தனர். அப்போது புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்களின் பேருந்துகள் வந்து கொண்டிருந்தபோது, எதிரே 350 கிலோ வெடி பொருள்களை ஏற்றி வந்த கார் ஒன்று வேகமாக மோதி வெடித்து சிதறியது.

இதில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை அடுத்து இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. இதனைத் தொடர்ந்து புல்வாமா தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு(NIA)விசாரணை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட  ‘Maruti Eeco’ என்கிற வாகனம் குண்டு வெடிப்பில் பல பாகங்களாக சிதறியது. இதனை தடயவியல் மற்றும் ஆட்டோமொபைல் நிபுணர்கள் சேகரித்து சோதனை நடத்தினர். இதில் கிடைத்த தகவலில் அடிப்படையில் காரின் உரிமையாளாரை தற்போது கண்டுபிடித்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், ஆனந்தநாக் பகுதியைச் சேர்ந்த ஜலீல் அகமது ஹக்கானி என்பவருக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு இந்த கார் விற்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 7 பேரிடம் கைமாறி கடைசியாக சஜத்பட் என்பவரின் கைக்கு கார் வந்துள்ளது. இவர் புல்வாமா தாக்குதல் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர் தான் இந்த காரை சஜத்பட் வாங்கியாதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜம்மு காஷ்மீர் போலிஸின் உதவியுடன் தேசிய புலனாய்வு அமைப்பு சஜத்பட் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதற்குள் சஜத்பட் தலைமறைவாகியுள்ளார். இவர் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

மேலும் சஜத்பட் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவரா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PULWAMATERRORISTATTACK, TERRORISM, NIA, ENQUIRY