ஓலாவிற்கு தடை..! அரசு எடுத்த அதிரடி முடிவு..! காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மாநில அரசின் விதிமுறைகளை மீறியதால் இந்தியாவின்  முன்னணி கால் டாக்சி சேவை வழங்கும் நிறுவனமான 'ஓலா’ நிறுவனத்திற்கு கர்நாடக அரசு 6 மாதம் தடை விதித்துள்ளது.


ஓலாவிற்கு தடை..! அரசு எடுத்த அதிரடி முடிவு..! காரணம் என்ன?
கர்நாடக அரசு தனது கொள்களைகளில் 'பைக் டாக்சி' பயன்பாட்டை எதிர்த்து வருகிறது. இந்நிலையில், இந்த கொள்கை உத்தரவை மீறி ஓலா நிறுவனம் தொடர்ந்து 'பைக் டாக்சி' சேவையை வழங்கி வந்துள்ளது. மேலும், கர்நாடக அரசு பல முறை எச்சரிக்கை விடுத்த பிறகும், ஓலா நிறுவனம் அதை கண்டுகொள்ளவில்லை.


இந்நிலையில், மாநில அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி கர்நாடக அரசு ஓலா நிறுவனத்திற்கு 6 மாதம்  தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.


KARNATAKA, OLA, BANNED