விமானப்படைத் தாக்குதலில் பலியான பயங்கரவாதிகளின் எண்ணிக்கை? ..மௌனம் கலைத்த நிர்மலா சீதாராமன்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் முகாம் மீது நடந்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

விமானப்படைத் தாக்குதலில் பலியான பயங்கரவாதிகளின் எண்ணிக்கை? ..மௌனம் கலைத்த நிர்மலா சீதாராமன்!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14 -ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 -க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூரத் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்கிற அமைப்பு நடத்தியதாக பொறுப்பேற்றது.

இதனை அடுத்து இந்திய விமானப்படை மிராஜ் 2000 ரக விமானங்கள் மூலம் சுமார் 1000 கிலோ அளவுள்ள வெடிகுண்டுகளை, காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பால்கோட் என்னுமிடத்தில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம் மீது வீசியது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்து இந்திய வெளியுறவு செயலர் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனை அடுத்து விமானப்படைத் தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், அதற்கான ஆதாரம் என்ன, போன்ற பல கேள்விகளை எதிர்கட்சிகள் எழுப்பின. இதற்கிடையே இந்த தாக்குதலில் 250 -க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,‘விமானப்படைத் தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என்பதில் வெளியுறவு செயலர் அறிக்கையே அரசின் நிலைப்பாடு. பயங்கரவாதிகளின் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால்தான் இந்தியா தாக்குதல் நடத்தியது. வரயிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோகமாக வெற்றி பெரும்’ என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

PULWAMATERRORISTATTACK, SURGICALSTRIKE2, NIRMALASITHARAMAN, DEFENCEMINISTER