இனிமே ஜாக்கிரத்தையா பயன்படுத்துங்க! தர பரிசோதனையில் தோல்வியடைந்த பிரபல பேபி ஷாம்பு நிறுவனத்தின் மீது நடவடிக்கை! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தானில் மேற்கொண்ட ஆய்வில் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு தரப் பரிசோதனையில் தோல்வியை அடைந்துள்ளது.

இனிமே ஜாக்கிரத்தையா பயன்படுத்துங்க! தர பரிசோதனையில் தோல்வியடைந்த பிரபல பேபி ஷாம்பு நிறுவனத்தின் மீது நடவடிக்கை! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

இந்நிலையில், மாநில மருந்துகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஆய்வு முடிவுகள் அமெரிக்க மருந்து தயாரிப்பாளரின் ஜான்சன்& ஜான்சனை பேபி ஆயிலை நிராகரித்துள்ளது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ஆஸ் பெஸ்டாஸ் கலந்துள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிப்ரவரியின் பிற்பகுதியில் ஜான்சன்& ஜான்சனை  பேபி பவுடரில் ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என்று உறுதி செய்த பின் உற்பத்தியை மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில், ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் மார்ச் 5 அன்று செய்யப்பட்ட ஆய்வில் ஜான்சன்&ஜான்சன் பேபி ஷாம்பு “தீங்கு விளைவிக்கும் பொருட்களால்” ஆனது என்றும் தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், விவரங்கள் வெளியாகவில்லை. அரசு வெளியிட்ட அறிக்கையில் 2021 காலாவதியாகும் பேபி ஷாம்பு மாதிரிகளை எடுத்து ஆய்வில் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது. 

இப்போது, மாநில மருந்துகள் கண்காணிப்புக் குழுவிலிருந்து பெறப்பட்ட முடிவுகள், மாதிரிகளில் ஃபார்மால்டிஹைட் உள்ளதாக கண்டுபிடித்துள்ளது. ஃபார்மால்டிஹைட் என்பது  கட்டிட பொருட்கள் தயாரிக்க பயன்படக்கூடியது. மேலும்,இது புற்றுநோயை உருவாக்கும் என்று அந்த முடிவில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

BABY SHAMPOO, HARMFUL