‘ஒரு வருடத்தில் 110 முறையா?’ இந்திய எல்லையில் பாகிஸ்தானின் தாக்குதல்.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் 110 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ள தகவல்கள் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்திய துணை நிலை ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். அதன் பின்னர் அபிநந்தன் சிறை மற்றும் விடுதலை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறின.
இந்நிலையில் தற்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜவ்ரி மாவட்டம், சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் குண்டுமழை பொழிந்ததில் இந்திய ராணுவத்தை சேர்ந்த யஷ் பால் என்ற வீரர் உயிரிழந்தார். மேலும் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரையில் 110 முறை பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதேபோல் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 2,936 முறை பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.