‘ரொம்ப நல்லாருக்கு’.. டீ குடித்தபடி ராணுவத்தினரிடம் பேசும் அபிநந்தன்.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பால்கோட் பகுதியில் முகாமிட்டிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மீது இந்திய விமானப்படை பதில் தாக்குதல் நடத்தியது.

‘ரொம்ப நல்லாருக்கு’.. டீ குடித்தபடி ராணுவத்தினரிடம் பேசும் அபிநந்தன்.. வைரல் வீடியோ!

அதன் பின்னர் இந்திய ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்த காஷ்மீரின் போர் நிறுத்த ஒப்பந்த பகுதிகளான  நவ்சேரா-ரஜோர் உள்ளிட்ட 4 பகுதிகளில் , அத்துமீறி குண்டு வீசிய பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாகவும் அந்த விமானங்கள் பள்ளத்தாக்கில் நொறுங்கி வீழ்ந்ததாகவும், விமானிகள் பாரசூட் மூலம் தப்பித்துச் சென்றுவிட்டதாகவும் இந்திய ராணுவம் கூறியுள்ளதாக ஏஎன்ஐ அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.

பின்னர் இந்திய விமானியும் துணை நிலை ராணுவ அதிகாரியுமான அபிநந்தன் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அதுதொடர்பான வீடியோ ஒன்றையும் பாகிஸ்தான் வெளியிட்டிருந்த நிலையில், பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய கமாண்டர் அபிநந்தனை கோரமாக தாக்கும் வீடியோ காட்சிகளும் அதன் பின்னர் வெளியாகின. அந்த வீடியோவைத் தொடர்ந்து அபிநந்தன் கைது செய்யப்பட்டு ரத்தம் வடிய அழைத்துச் செல்லப்பட்ட வீடியோவும் அடுத்து வெளியானது.

இந்நிலையில் அபிநந்தன் டீ குடித்தபடி பேசும் இன்னொரு ஒரு நிமிட வீடியோ வெளியாகியுள்ளது, அதில் பாகிஸ்தான் ராணுவம் தன்னை கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கிறார். அதன்படி, ‘நான் பேசுவதை ஆவணப்படுத்த விரும்புகிறேன். நான் எனது தாயகத்துக்கு திரும்பினாலும் என் வாக்குமூலத்தை மாற்றப்போவதில்லை. பாகிஸ்தானின் ஆர்மி ஆபீஸர்கள் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் ஜென்டில்மேன்கள். என்னை மீட்புப் பணியில் என்னை மீட்ட கேப்டனில் தொடங்கி, ஜவான்களிடம் இருந்தும் படைவீரர்களிடம் இருந்தும் என்னை மீட்டார்கள். இதைத்தான் எனது தேசத்தின் ராணுவப்படையும் செய்ய வேண்டும் என நான் எண்ணுகிறேன். நான் தென்னிந்தியாவைச் சேர்ந்த மணமானவர். டீ மிகவும் நன்றாக இருக்கிறது. மற்ற விபரங்களைச் சொல்வதற்கு எனக்கு அனுமதியில்லை மன்னிக்கவும்’ என கூறியுள்ளார்.

ABHINANDAN VARTHAMAN, IAF, INDIAN AIR FORCE, COMMANDER