'அபிநந்தன் ஸ்டைலில் வேண்டும்'.. சலூனில் குவியும் இளைஞர்கள்.. ட்ரெண்டாகும் அபிநந்தன் மீசை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புல்வாமா தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உட்பட இந்திய துணை நிலை ராணுவ வீரர்கள் சுமார் 40 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

'அபிநந்தன் ஸ்டைலில் வேண்டும்'.. சலூனில் குவியும் இளைஞர்கள்.. ட்ரெண்டாகும் அபிநந்தன் மீசை!

பின்னர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு முகாமிட்டிருந்த பகுதியில் இந்திய ராணுவம் இறங்கி அதிரடி தாக்குதல் நிகழ்த்தி சுமார் 300 பயங்கரவாதிகளை அழித்ததாக இந்தியா தெரிவித்தது. இந்தியாவின் இந்த பதிலடி தாக்குதல் இந்தியர்கள் பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நேரத்தில்தான் இந்திய ராணுவ விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு சர்வதேச நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது.

முன்னதாக மிக்-21 ரக போர் விமானத்தில் சென்ற அபிநந்தன் பாராசூட் மூலம் குதித்து, பாகிஸ்தானில் சிறைபிடிக்கப் பட்டார். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் துணிச்சலாகவே பேசினார். இந்திய நாட்டின் ரகசியங்களையும் மேலோட்டமான சில தகவல்களையும் கூட கூற மறுத்துவிட்டார். சென்னையில் அவரது பெற்றோர்கள் இருக்கும் நிலையில், தாம்பரத்தில் பயிற்சி பெற்று குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வந்தவர்தான் அபிநந்தன் வர்த்தமான் என்று நாடே அறிந்துகொண்டது.

இதனை அடுத்து இளைஞர்கள் அபிநந்தன் மீண்டு வந்ததைக் கொண்டாடியதோடு, அவரது கொடுவா மீசை ஸ்டைலை விரும்பத் தொடங்கியுள்ளனர். அபிநந்தனின் துணிச்சலுக்கும் மீசைக்குமான தொடர்பு பலரையும் ஈர்த்துள்ளதால், அபிநந்தனின் மீசை தற்போது கார்ட்டூன் படங்களாக வரையப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.

இளைஞர்கள் பலரும் அவரை பிடித்துள்ளதாலும், அவரது ரசிகர்களாகிவிட்டதாலும் அவர் போன்று மீசை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக பெங்களூருவைச் சேர்ந்த முகமது சந்த் அபிநந்தனைப் போல் மீசை வைத்து பிரபலமாகியுள்ளார்.

ABHINANDANMUSTACHE, IAFPILOT, ABHINANDANVARTHAMAN, TRENDING, VIRAL