‘பாத்துகிட்டு இருக்க மாட்டோம்.. பதிலடி கொடுக்க உரிமை இருக்கு’:பாகிஸ்தான் பிரதமர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்ததை அடுத்து, நாடு பாதுகாப்பாக உள்ளதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

‘பாத்துகிட்டு இருக்க மாட்டோம்.. பதிலடி கொடுக்க உரிமை இருக்கு’:பாகிஸ்தான் பிரதமர்!

இன்று அதிகாலை 3:30 மணிக்கு காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மிராஜ் 2000 ரக போர்விமானங்கள் மூலம் சுமார் 1000 கிலோ அளவிலான குண்டுகளை பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய ராணுவம் வீசியது.

இந்த பதிலடி தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கட்டுப்பாட்டு அறை முற்றிலும் தகர்க்கப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. இதனை அடுத்து இந்திய விமானங்கள் அத்துமீறி உள்ளே வந்தது உண்மைதான் என பாகிஸ்தான் ராணுவம் தகவல் வெளியிட்டது.

குஜராத் மாநிலம் கட்ச் என்னும் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா சிறிய ரக விமானமான ட்ரோன் பறந்து வந்தது. இதனை அடுத்து ட்ரோனை உடனடியாக இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இது இந்திய எல்லையில் பாதுகாப்பை உளவு பார்ப்பதற்காக அனுப்பப் பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கரு என்னும் இடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றி பிரதமர் மோடி, ‘நாடு பாதுகாப்பாக உள்ளது; நாட்டு மக்களுக்கு நான் உறுதி கூறுகிறேன். மக்களின் பாதுகாப்புக்கு காரணம் நம் நாட்டு ராணுவ வீரர்கள்தான். எதற்காகவும் யாருக்காகவும் இந்தியா அடிபணியாது. பதிலடி தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்’ என மோடி பேசியுள்ளார்.

ஆனால் இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மையில்லை என மறுத்து வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தற்போது எந்த விதமான தாக்குதலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என முப்படைகளுக்கு கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மெமூத் குரேஷி,‘எல்லைமீறி இந்தியா ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதனால் பாகிஸ்தான் தன்னை பாதுகாத்துக்கொள்ள பதிலடி கொடுக்க முழு உரிமை உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

NARENDRAMODI, INDIANAIRFORCE, IAFSTRIKES, IMRANKHAN