கோவாவில் மீண்டும் பாஜக: கண்ணீர் விட்டு அழுத புதிய முதல்வர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோவாவில் முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் உடல் நல குறைவால் காலமானதையடுத்து, கோவாவின் புதிய முதலமைச்சராக பிரமோத் சாவந்த் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

கோவாவில் மீண்டும் பாஜக: கண்ணீர் விட்டு அழுத புதிய முதல்வர்!

இதற்கென ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில், அவர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதையடுத்து  இன்று சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் கோவா சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான தனது அரசின் பலத்தை முதல்வர் பிரமோத் சாவந்த் நிரூபித்தார். கோவா மாநிலத்தில் பாஜக தலைமையில் மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி, கோவா பார்வேர்டு கட்சி, 3 சுயேட்சைகள் ஆகியோரின் ஆதரவில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 20 எம்எல்ஏக்கள் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாகவும். 15 எம்எல்ஏக்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சாவந்த் வெற்றி பெற்றதாக சட்டப்பேரவையில் சபாநாயகர் மைக்கேல் லோபா அறிவித்தார்.

இதன் பிறகு முதல்வர் பிரமோத் சாவந்த் பேசுகையில்  ‘நான் இங்கு எம்எல்ஏவாக இருப்பதற்கு மனோகர் பாரிக்கர் தான் காரணம்’  எனக் கூறி  ‘கண்ணீர் விட்டு அழுதார்’. பின்னர் பேசியவர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அனைத்து எம்எல்ஏக்களும்  இணைந்து பணியாற்ற வேண்டும், வளர்ச்சிப்பணிகள் மாநிலத்தின் அனைத்து இடங்களுக்கும் செல்ல உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

BJP, GOA, CHEIF MINISTER