‘நல்ல படிச்சு டாக்டர் ஆவான்னு நெனச்சோம், ஆனா இப்டி பண்ணுவான்னு நெனைக்கவேயில்ல’.. ஆதில் சகோதரர் வேதனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுல்வாமா பகுதியில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தி 40 -க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் உயிரைப்பறித்த ஆதில் குறித்து அவரது சகோதரர் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.
தங்களது விடுமுறையை முடித்துவிட்டு கடந்த பிப்ரவரி 14 -ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சுமார் 2,500 வீரர்கள் பயணித்தனர். அப்போது வெடுகுண்டுடன் வந்த கார் ஒன்று ராணுவ வீரர்கள் வந்த பேருந்தின் மீது மோதியது. இதில் 40 -க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ்-இ-முகமது என்கிற அமைப்பைச் சேர்ந்த 19 வயதான ஆதில் முகமது தார் என்ற இளைஞன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, தற்போது ஆதில் குறித்து அவரது சகோதரர் ஃபரூக் தர் என்பவர் நியூஸ் 18 சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘ஆதில் ரொம்ப நல்ல படிக்கிற பையன். சின்ன வயசுல இருந்தே ஸ்கூல், வீடு படிப்புன்னு மட்டுமே இருப்பான். நல்ல படிச்சு டாக்டர் ஆகனும்னு கனவு கண்டான். ஆனா இன்னைக்கு இப்படி ஒரு கொடூரமான காரியத்தைப் பண்ண அவனுக்கு எப்படி மனசு வந்ததுனே தெரியல. 18 வயசா இருக்கும் போது ஸ்கூல் முடிச்சிட்டு வீட்டுக்கு வரும் போது ரொம்ப விரக்தியா வந்தான். அப்பவே அவன் எங்களவிட்டு போடுவானு தெரியாம போச்சு’ என ஃபருக் பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், அவன் 12 -வது வகுப்பு படிக்கும் போது அவனுடைய நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் இருந்தது. ஸ்கூலுக்கு போறத நிறுத்திட்டான். அதிகமா மசூதிக்குப் போக ஆரம்பிச்சான். அவன் சீக்கிரமே சரியாகிடனும்னு குடும்பமே வேண்டிகிட்டு இருப்போம். அப்பா சைக்கிள்ள துணி வியாபாரம் செய்வாரு. அம்மா வீட்ல தான் இருப்பாங்க. ப்ளஸ் 2 பரீட்சைக்கு அப்றம் அவன் வீட்டுக்கு வரல. அவனக் காணோம்னு போலிஸ்ல புகார் கொடுத்தோம். கொஞ்ச நாளுக்கு அப்றம் திடீருனு போலிஸ் எங்க வீட்ட சோதனை பண்ண வந்தாங்க. அப்போதான் ஆதில் ஒரு தீவிரவாத இயக்கத்தில சேர்ந்திருக்காங்கிற விஷயமே எங்களுக்கு தெரியவந்தது. அந்த நாள்ல இருந்து எங்க வாழ்கையே மாறிடிச்சு. எங்க அப்பாவும் அம்மாவும் நடைபிணமா ஆயிட்டாங்க. போலிஸ் வந்து விசாரிச்சப்போ எங்களுக்கு தெரிஞ்ச எல்லத்தையும் சொல்லிட்டோம்.
என்னுடைய சகோதரனால், நாடு பல வீரர்களை இழந்தது. பல குழந்தைங்க அவுங்க அப்பாவ இழந்து, பெத்தவங்க தங்களது பிள்ளைகளை இழந்து தவிக்குறாங்க. காஷ்மீர்ல ரத்தம் ஓடுனது போதும், இனியும் ரத்தம் சிந்த வேண்டாம் என ஃபருக் தர் வருத்தத்துடன் பேசியுள்ளார்.