‘மனித சிறுநீரை சேமித்து வைக்க வேண்டும்’.. நிதின் கட்காரி பேச்சால் சர்ச்சையா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய நாட்டுக்குத் தேவையான மொத்த யூரியாவையும் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ள யோசனை பலர் அறிவார்ந்த யோசனையாகவும் சிலர் சர்ச்சையான யோசனையாகவும் கருதுகின்றனர்.

‘மனித சிறுநீரை சேமித்து வைக்க வேண்டும்’.. நிதின் கட்காரி பேச்சால் சர்ச்சையா?

வெகுசில பாஜகவினரால் அடுத்த பிரதமர் வேட்பாளராக நிறுத்தச்சொல்லி முன்மொழியப்படும்  பெயர்தான் நிதின் கட்கரி. சர்ச்சைக்கு பஞ்சமில்லாத மேடைப் பேச்சுகளை பேசும் கட்கரி,  முன்னதாக நிகழந்த 5 மாநில இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்தபோது,  அமித் ஷாவையும் மோடியையும் விமர்சித்திருந்தார்.

இந்த சூழலில், அண்மையில் நாக்பூரில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட நிதின் கட்கரி பேசியபோது, மனித சிறுநீரில் அம்மோனியம் சல்பேட் மற்றும் நைட்ரஜன் இருப்பதால் அதை வைத்து யூரியா தயாரிக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும், ‘இயற்கைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட வேண்டிய உயிரி உரம் நம் நாட்டிலே தயாரிக்கப்பட்டால் வெளிநாட்டில் இருந்து யூரியாவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அத்தனை சத்துக்களும் சிறுநீரில் உள்ளதால் அவற்றை விமான நிலையத்தில் சேமித்து வைக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

மேலும் தனது ஐடியாக்கள் எல்லாம் புத்திசாலித்தனமாக இருப்பதாலேயே தனக்கு யாரும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று வருத்தப்பட்டவர், அரசு எந்திரத்தில் உள்ள பலரும், ஒரே திசையைப் பார்த்துச் செல்லும் காளைகள்போல பயிற்றுவிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதேபோல் வெட்டிப்போட்ட மனித முடியிலிருந்து கூட அமினோ அமிலத்தைத் தயாரித்து அதையும் உரமாக்க முடியும் என்றும் அது வழக்கத்தை விட 25 சதவிகிதம் கூடுதலாக விளைச்சலைக் கொடுக்கும் என்றும் தன் சொந்த தொழிற்சாலையில் இதைச் செய்வதாகவும், துபாய் அரசிடம் இருந்து சுமார் 180 கன்டெய்னர் வரை அமினோ அமிலத்தை ஏற்றுமதி செய்வதற்கான நேரடி ஆர்டரையும் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

BJP, NITIN GADKARI, MINISTER, CARBAMIDE, URIYA