'10 ரூபாய் Coins இருக்கா உங்ககிட்ட???'... 'புது மாதிரியான Offerஆல் குவியும் வாடிக்கையாளர்கள்!!!'... 'உணவக உரிமையாளர் சொன்ன அசத்தல் காரணம்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஉணவகம் ஒன்று வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ருபதங்கா சாலையின் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உள்ள உணவகமான நிசர்கா கிராண்டில், சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய முழு பில் தொகையையும் 10 ரூபாய் நாணயங்களாக செலுத்தினால் மொத்த கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து அமலில் இருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டு ஏராளமானோர் 10 ரூபாய் நாணயங்களுடன் இந்த உணவகத்திற்கு படையெடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி பேசியுள்ள அந்த உணவக உரிமையாளர் கிருஷ்ண ராஜ், "10 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதில் ரிசர்வ் வங்கி மிகவும் பொறுமையாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம் பெரும்பாலான வியாபாரங்களில் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். பெங்களூருவில் நடுத்தரமான உணவகம் ஒன்றில் சராசரியாக 50 ஆயிரம் எண்ணிக்கையிலான 10 ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்கள் தேவைப்படுகின்றன. எனவே நாணயங்களில் ஏற்படும் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இப்படியொரு விஷயத்தை முன்னெடுத்துள்ளோம்.
தற்போது நாளொன்றுக்கு 2,500 நாணயங்கள் எங்கள் உணவகத்திற்கு வருகின்றன. இதனை வியாபார ரீதியாக புழக்கத்தில் விடுகிறோம். இந்த முயற்சி வெற்றி அடைந்துவிட்டால் அனைவரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்கத் தொடங்கிவிடுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிக்கு பெங்களூரு தெற்கு எம்.பி தேஜஸ்வி சூர்யா, மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத பிரசாத் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிட்டத்தக்கது.
மற்ற செய்திகள்