பாராட்டுக்களை அள்ளிய காவலர்... கொட்டும் மழையிலும் இடைவிடாதப் பணி... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கனமழையிலும் நனைந்துக் கொண்டே, இடைவிடாது போக்குவரத்துப் பணியில் ஈடுபட்ட காவலருக்கு, சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

பாராட்டுக்களை அள்ளிய காவலர்... கொட்டும் மழையிலும் இடைவிடாதப் பணி... வைரலாகும் வீடியோ!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பசிஸ்தா பகுதி வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு நேற்று மாலை பேய்மழை பெய்துக்கொண்டிருந்தது. அப்போது போக்குவரத்துக் காவலர் மிதுன் தாஸ், சாலையின் நடுவே மழையில் நனைந்துக் கொண்டே போக்குவரத்தை சீர்செய்துக் கொண்டிருந்தார். மேற்கூரை இல்லாமலும், ரெயின் கோட் கூட அணியாமல், காவலர் மிதுன் தாஸ், பணியில் ஈடுபட்டிருந்தார். இதனைக் காரில் சென்ற யாரோ ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, தற்போது அது வைரல் ஆகியுள்ளது.

மிதுன் தாஸின் பணி ஈடுபாட்டால் நெகிழ்ந்துபோன கவுகாத்தி காவல் ஆணையர் தீபக் குமார், 'மழை நேரத்தில் பரபரப்பு நிறைந்த பல்தான் பஜார் சாலைகள், வாகன நெரிசலில் சிக்கிவிடும். புயல் காற்றிலும், அடை மழை என்பதையும் பொருட்படுத்தாமல், போக்குவரத்தை சீர்செய்த மிதுன் தாஸ் பாராட்டுக்குரியவர்' என்று தெரிவித்துள்ளார். மேலும், 'மிதுன் தாஸூக்கு விருது வழங்கி சிறப்பிக்க உள்ளதாக' அவர் கூறியுள்ளார்.

மிதுன் தாஸின் அசாதரணமான பணியைப் பாராட்டி, அசாம் மாநில அதிகாரப் பூர்வ சமூக வலைத்தளமான ட்விட்டரில், வீடியோவை வெளியிட்டு அவருக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருவதுடன், ரீ ட்விட்டும் செய்து வருகின்றனர்.

POLICE, ASSAM, HEAVYRAIN, VIRALVIDEO, TWITTER, GUWAHATI, MITHUNDAS, HEARTS