'IT இளைஞர்கள் தான் டார்கெட்டே'... 'அப்பாடா, வாழ்க்கை செட்டாயிடுச்சுன்னு சந்தோஷப்பட்டா'... 'அடுத்ததாக காத்திருந்த பேரதிர்ச்சி!'... வெளியான 'பகீர்' பின்னணி!!!...
முகப்பு > செய்திகள் > இந்தியாஐடி இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றும் மோசடி கும்பல் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது பலரும் நல்ல ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து, வாழ்கையில் செட்டில் ஆக வேண்டுமென்ற கனவில் உள்ள நிலையில், அதையே சில மோசடி கும்பல்கள் பயன்படுத்தி பணம் பறிக்கத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசியுள்ள Information Technology Association of Andhra Pradesh (ITAAP) எனும் அமைப்பின் தலைவர் ஸ்ரீதர் கொசராஜு, "காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் இருக்கும் சில ஐடி கம்பெனிகள் சைபர் க்ரைம் போலீசாரிடம் போலி ப்ளேஸ்மெண்ட் ஏஜென்சிக்கள் குறித்து தகவல் கொடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர்.
இந்த மோசடி கும்பல்கள் முதலில் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் வேலை தேடும் வலைதளங்களில் இருந்து, வேலை தேடி விண்ணப்பித்து இருக்கும் இளைஞர்களின் விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்கிறார்கள். அதன் பின் உண்மையான ஐடி கம்பெனிகளின் ப்ளேஸ்மெண்ட் ஏஜென்சிக்களைப் போல, வேலைக்கான ஆஃபர் கடிதங்களைத் தயாரிக்கிறார்கள். இந்த ஆஃபர் கடிதங்களை வேலை தேடி விண்ணப்பித்து இருக்கும் இளைஞர்களின் விண்ணப்பத்துக்குத் தகுந்தாற்போல தயாரிக்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனையால் வேலைவாய்ப்பு குறைந்துள்ளதை பயன்படுத்திக்கொள்ளும் அவர்கள் ஒரு நபரிடம் இருந்து 1,000 - 5,000 ரூபாய் வரை கட்டணங்களை வசூலிக்கின்றனர்.
இந்த போலி ப்ளேஸ்மெண்ட் ஏஜென்சிகள், போலி வேலை வாய்ப்புக்கான கடிதங்களைக் (Job Offer) கொடுக்கும் போது, நேர்காணல்களை நடத்தி பணத்தை டிஜிட்டல் வாலட்கள் வழியாக அனுப்பச் சொல்லி பணம் பறிக்கிறார்கள். எல்லா வேலையும் முடிந்து பணம் கிடைத்ததும் அந்த இளைஞர்களின் போன் நம்பர்களை பிளாக் செய்துவிடுகிறார்கள். இந்த நெருக்கடியான கால கட்டத்தில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமங்கள் இருந்தாலும், இதுபோல மோசடி செய்பவர்களிடம் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம். யாராவது வேலை கொடுக்கிறேன் பணத்தைச் செலுத்துங்கள் என்றால், பல முறை யோசித்து செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்