இவ்வளவு FIT-ஆ இருந்த ஆனந்த் அம்பானி உடல் எடை அதிகரிக்க காரணம் இதுவா?..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆனந்த் அம்பானியின் உடல் எடை அதிகரித்த காரணங்கள் குறித்து சில தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன.

இவ்வளவு FIT-ஆ இருந்த ஆனந்த் அம்பானி உடல் எடை அதிகரிக்க காரணம் இதுவா?..

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | பழனி முருகன் கோயிலில் தனது அம்மாவுடன் சாமி தரிசனம் செய்த நடிகை அமலா பால்.. வைரல் போட்டோஸ்

முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. முகேஷ் அம்பானியுடைய ரிலையன்ஸ் குழுமத்தில் எரிசக்தி துறையை தற்போது ஆனந்த் அம்பானி கவனித்து வருகிறார். சமீபத்தில் முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு துபாயில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியிருந்தார். மேலும், ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய பொறுப்புகள் முகேஷ் அம்பானியின் மகன்கள் மற்றும் மகளுக்கு  அளிக்கப்பட்டன.

ஆன்ந்திற்க்கும்  ராதிகா மெர்ச்சன்டிற்கும் கடந்த  ஜனவரி 19, 2023 அன்று நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது நிச்சயதார்த்த விழா முகேஷ் அம்பானியின் இல்லமான 'ஆண்டிலியா'வில் நடந்தது. பழமையான குஜராத்தி  பாரம்பரிய முறையில் மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

Anant Ambani reportedly weight gained due to this reasons

Images are subject to © copyright to their respective owners.

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் விரன் மெர்ச்சன்ட் மகள் தான் ராதிகா மெர்ச்சன்ட்.  தனது தந்தையின் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார் ராதிகா மெர்ச்சன்ட்.

சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ஆனந்த் அம்பானி & ராதிகா மெர்ச்சன்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின. அப்போது சமூக வலைத்தளங்களில் ஆனந்தின் பழைய புகைப்படங்களுடன் தற்போதைய புகைப்படங்களை ஒப்பிட்டு பலர் ஆனந்தின் உடல் எடை அதிகரித்தது குறித்து பதிவிட்டு வந்தனர். தற்போது ஆனந்த் அம்பானியின் உடல் எடை அதிகரித்ததற்கு காரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

Anant Ambani reportedly weight gained due to this reasons

Images are subject to © copyright to their respective owners.

2016 ஆம் ஆண்டில்  கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு காரணமாக ஆனந்த் அம்பானி உடல் எடையை குறைத்தார்.

2017 ஆம் ஆண்டில் நீடா அம்பானி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ஆனந்த் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அதிகப்படியான ஸ்டிராய்டு மருந்துகள் கொடுத்து ஆஸ்துமாவுக்கு சிகிச்சை அளிப்பதாகவும்" நீடா அம்பானி கூறியிருந்தார். 

Anant Ambani reportedly weight gained due to this reasons

Images are subject to © copyright to their respective owners.

மேலும்  உடல் பருமனாலும் ஆனந்த் அம்பானி அவதியுறுவதாகவும் நீடா அம்பானி அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.

Also Read | திருவண்ணம்மாலை கோயிலில் 'வாரிசு' இயக்குனர் வம்சி சாமி தரிசனம்.! TRENDING PHOTOS..

ANANT AMBANI, ANANT AMBANI WEIGHT GAIN

மற்ற செய்திகள்