‘போர் விமானம் ஓட்ட ஆசையாக இருக்கு’.. பணிக்கு மீண்டும் திரும்புவாரா அபிநந்தன்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பணிக்கு திரும்புவது குறித்து விமானப்படைத் தளபதி பி.எஸ். தனோவா பேட்டியளித்துள்ளார்.

‘போர் விமானம் ஓட்ட ஆசையாக இருக்கு’.. பணிக்கு மீண்டும் திரும்புவாரா அபிநந்தன்?

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமனாப்படை தீவிரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். உலக நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவித்தது. இதனை அடுத்து விமானி அபிநந்தனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவையை அடுத்துள்ள சூலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விமானப்படைத் தளபதி பி.எஸ். தனோவா,  ‘அபிநந்தன் போர் விமானம் ஓட்டுவதும், ஓட்ட முடியாமல் போவது அவரின்  உடல் தகுதியைப் பொறுத்தது. அவருக்கு உடல்ரீதியான தகுதிகள் ஆராயப்பட்டு வருகின்றன. உடல் தகுதியை எட்டினால் மட்டுமே மீண்டும் விமானத்தை இயக்க முடியும்’ என கூறியுள்ளார்.

மேலும், பேசிய அவர்,‘இந்திய விமானங்கள் பாலகோட்டில் இலக்கை  துல்லியமாகத் தாக்கின. ஆனால், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதைத் துல்லியமாகக் கூற முடியாது’ என விமானப்படைத் தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அபிநந்தன் தனக்கு சிகிக்சை அளிக்கும் மருத்துவர்களிடம், விரைவில் மீண்டும் போர் விமானம் ஓட்ட ஆசைப்படுவதாக தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது.

ABHINANDANVARTAMAN, MIG21, INDIANAIRFORCE, BSDHANOA, IAFCHIEF