‘ஆபத்தான குதிரைப் பந்தயம்’.. ‘9 வயது சிறுவனின் சாகசம்’.. மனம் பதற வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆபாத்தான முறையில் சிறுவன் ஒருவன் குதிரை மீது பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாரஷ்ட்ரா -கர்நாடகா எல்லையில் உள்ள பெலகாவியா என்னும் பகுதியைச் சேர்ந்த 9 வயதான லோகேஷ் என்னும் சிறுவன் அப்பகுதியில் நடைபெறும் குதிரை பந்தயங்களில் பங்கு பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளான். தனது 6 வது வயதில் இருந்தே குதிரை மீது சவரி செய்து பழக ஆரம்பித்துள்ளான்.
அப்பகுதியில் நடைபெறும் பல குதிரை பந்தயங்களில் லோகேஷ் கலந்து கொண்டு பரிசு பெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்பந்தயங்களில் அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை பரிசு தொகை வழக்கப்படுவதாக பந்தயத்தில் கலந்து கொள்பவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் சிக்கோடி என்னும் பகுதியில் நடந்த குதிரை பந்தயத்தில் சிறுவன் லோகேஷ் கலந்து கொண்டு குதிரை மீது சவாரி செய்துள்ளான். அப்போது குறிப்பிட்ட தொலைவு சென்றதும் குதிரையில் இருந்து சிறுவன் கீழே விழுகிறான். இந்த காட்சி காண்போரின் மனதை பதற செய்கிறது.
இதனை அடுத்து பின்னால் இருசக்கர வாகனத்தில் வருவோர் லோகேஷை மீட்டு பைக்கில் ஏற்றிச் செல்கின்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் மீண்டும் குதிரையின் மீது ஏற்றி விடுகின்றனர். இந்த போட்டியில் லோகேஷே வெற்றி பெற்றுள்ளான். இதுபற்றி தெரிவித்த சிறுவனின் தந்தை, ‘நானும் என் மனைவியும் கூலி வேலை செய்துவருகிறோம். லோகேஷ் சம்பாதித்து வரும் பணத்தில்தான் அரை வயிற்று கஞ்சியாவது குடிக்கிறோம்’ என தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் சிறுவனை ‘பாகுபலி’ என செல்லமாக அழைப்பதாகவும் கூறுகின்றனர்.