எழுதுறது 2 பேர்.. அத கண்காணிக்க 8 பேரா? இதென்னடா எக்ஸாம்க்கு வந்த சோதனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 2 மாணவிகளை கண்காணிக்க 8 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
நாடு முழுவதும் இப்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளுக்காக அந்த பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு அந்த 3 மாணவிகளை கண்காணிக்க 8 அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தபட்டனர்.
அதிலும் 1 மாணவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் தேர்வு எழுத வரவில்லை. எனவே 2 மாணவிகள் மட்டுமே பொதுத்தேர்வை எழுதினர். மேலும் இவர்களைக் கண்காணிக்க 8 அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர்.
இந்த 2 மாணவிகளை கண்காணிக்க ஒரு தலைமை கண்காணிப்பாளர், கல்வித்துறை கண்காணிப்பாளர், தேர்வு மைய கண்காணிப்பாளர், மருத்துவ உதவியாளர், 2 போலீஸார் மற்றும் 2 அதிரடி கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 8 பேர் பணியில் ஈடுபட்டனர்.