என்ன நடக்குது...? திடீரென கட்சி மாறிய 5000 உறுப்பினர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆர்.எஸ்.எஸின் முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பிலிருந்து, இஸ்லாமியர்கள் வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடக்குது...? திடீரென கட்சி மாறிய 5000 உறுப்பினர்கள்!

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ்-ன் முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பிலிருந்து வெளியேறி, 5000 இஸ்லாமியர்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.  பா.ஜ.க.வின் தாய் வீடான ஆர்.எஸ்.எஸ்-ன் முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பில் பாகுபாடு உள்ளதாக, அதனைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பின் நாக்பூர் நகரத் தலைவர் ரியாஸ் கான், 'ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. கட்சியினர் தங்களது கோரிக்கைகளை, தேவைகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை, இரண்டாம்தர ஆட்களாகவே நடத்துகின்றனர். எனவே, 5,000 நபர்களை அழைத்துக்கொண்டு வந்து காங்கிரஸில் இணைந்துள்ளதுதாக' கூறியுள்ளார்.

மேலும், முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பைச் சேர்ந்த பெண் அணியினர், 'ஆர்.எஸ்.எஸின் பொதுநிகழ்ச்சிகளுக்கு வரும்போது புர்காவை அணிந்துக்கொண்டு வரவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வலியுறுத்துவதாக', அந்த அமைப்பைச் சேர்ந்த, சில பெண் உறுப்பினர்கள் புகார் கூறியுள்ளனர். நாக்பூர் காங்கிரஸ் மக்களவைத் தொகுதி வேட்பாளர் நானா படோல், தங்களது கட்சியில் வந்து இணைந்துள்ள ஐந்தாயிரம் பேரையும் பெருந்தன்மையுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

LOKSABHAELECTIONS2019, RSS, MRM, CONGRESS, BJP, NAGPUR