பச்ச புள்ளைங்கள பாடாய்ப்படுத்தும் அத்லெட்டிக் ஸ்கூல்.. இதெல்லாம் நியாமாரே?

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள்.

பச்ச புள்ளைங்கள பாடாய்ப்படுத்தும் அத்லெட்டிக் ஸ்கூல்.. இதெல்லாம் நியாமாரே?

அவ்வகையில் குழந்தைகளின் இளம் பிராயத்திலேயே அவர்களுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் கொடுப்பது ஆரோக்கியமான விஷயம்தான். குழந்தை பருவத்தில்தான் உடலினை வளைத்து ஒடித்து, கட்டுறுதியுடன் வைத்துக்கொள்ள முடியும்.

அதுவும் குழந்தைகள் பின்னாளில் வளர்ந்து வாழும்வரை உடல்கள் அவர்களுக்கேற்றார்போல், அவர்களின் மொழியைப் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல் உடல் வளைந்துகொடுக்கச் செய்யும் என்பதால் மிக சிறிய பருவத்திலேயே பலரும் குழந்தைகளுக்கு யோகாசன பயிற்சி, ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை அளிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் ஆயிரம்தான் இருந்தாலும் அவர்கள் சிறுவர்கள், குழந்தைகள் என்கிற கருணை கொஞ்சமாவது இருக்க வேண்டியது அவசியமாயிற்றே.

சீனாவின் மரபுகளில் மிக முக்கியமான மரபு ஜிம்னாஸ்டிக் மற்றும் குங்பூ உள்ளிட்டவை. அவற்றிற்கு அடிப்படை ஆதாரம் உடல்தான். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். அந்த சுவரை தயார் செய்ய சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள யாங்பு யூத் அத்லெட்டிக் பயிற்சி பள்ளி தானும் பாடாய்ப்படுகிறது. அந்த குழந்தைகளையும் பாடாய்ப்படுத்துகிறது.

இந்த பள்ளியில் அளிக்கப்படும் கடுமையான பயிற்சிகளை வெகு இயல்பாகவும் அமைதியாகவும் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் ஒருபுறம் இருந்தாலும், அழுதுபுரண்டு அதே சமயம் அடக்குமுறைக்கு பயந்து விம்மியபடி  லெக் ஸ்ட்ரெச், ஜிம்னாஸ்டிக் பயிற்சி,   வுட்டன் பாரில் தொங்கும் சிறுவர்கள், ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் தலைகீழாக நிற்கும் சிறுமிகள் உள்ளிட்ட எல்லா பயிற்சிகளையும் மேற்கொள்ளும் சில குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. #கொஞ்சம் கருணை காட்டுங்க மாஸ்டர்.

VIRALPHOTOS, GYMNASTIC, CHINA