'இனி ஊழியர்களுக்கு அந்த கவலை வேண்டாம்'... 'மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ள பிரபல நிறுவனங்கள்!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவின் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் அதன் ஊழியர்களுக்கு முழுச் சம்பளத்தைக் கொடுக்கத் துவங்கியுள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் மொத்த வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் முடங்கியுள்ளது. இதையடுத்து அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதைச் சமாளிக்க செலவின குறைப்பில் இறங்கின. இந்தியாவில் இருக்கும் 90 சதவீத ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதன் மூலம் அதிகளவிலான பணத்தை இக்காலகட்டத்தில் சேமித்தன.
இந்நிலையில் இந்தியாவில் இன்னும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் குறையாத நிலையிலும், 5 மாதங்களாகச் சம்பள குறைப்பு செய்துவந்த பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் அதன் ஊழியர்களுக்கு முழுச் சம்பளத்தைக் கொடுக்கத் துவங்கியுள்ளன. இந்தியாவின் முன்னணி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான ஓயோ ரூ 8 லட்சம் வரையில் சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் முழுச் சம்பளம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் 60 சதவீத ஊழியர்கள் முழுச் சம்பளத்தை வாங்க உள்ளனர். மற்ற ஊழியர்களுக்கும் 12.5 - 25 சதவீத சம்பளம் மட்டுமே இனி வரும் மாதங்களில் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல சில வாரங்களுக்கு முன்பு அப்கிராட், சோமேட்டோ, க்ரோபர்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஊழியர்களுக்கு முழுச் சம்பளத்தைக் கொடுப்பதாக அறிவித்திருந்த நிலையில், பல நிறுவனங்களும் இந்த மாதம் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் போனஸ் ஆகியவற்றைக் கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்