அமேசான் நிறுவனம் அதிரடி! கலக்கத்தில் கூகுள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

அமேசான் நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தினால் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களின் வருவாய் வீழ்ச்சி அடையக்கூடும் எனக் கூறப்படுகிறது.

அமேசான் நிறுவனம் அதிரடி! கலக்கத்தில் கூகுள்!


உலகளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் தனது மொபைல் அப்ளிகேஷனில் புது விதமான விளம்பரங்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.

இதன் முதற்கட்டமாக ஐபோன்களுக்கான அமேசான் அப்ளிகேஷனில் சோதனை நடைப்பெற்று வருகிறது. இதன்பின்னர் ஆண்ட்ராய்டு போன்களுக்கான அப்ளிகேஷனிலும் இந்த சோதனையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதில், வாடிக்கையாளர் தனக்குரிய ஒரு பொருளை அமேசான் ஆப்பில் தேடிய பின்னர் வரும் முடிவுகளுக்கு மத்தியில் இந்த விளம்பரங்களும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே பேஸ்புக் பதிவுகளுக்கு இடையில் விளம்பரங்களை அனுமதித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது யூடியூப் வீடியோக்களுக்கு மத்தியில் விளம்பரங்களை அனுமதித்துள்ளது.

இப்போது, அமேசான் நிறுவனத்தின் இத்திட்டத்தினால் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களின் விளம்பர வருவாய் வீழ்ச்சி அடையக்கூடும் என்று  ஈ-மார்க்கெட்டர் கருத்துகணிப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.