'1.2 லட்சம் பேருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்'... 'கொரோனா காலத்திலும்'... 'குட் நியூஸ் சொன்ன பிரபல ஐடி நிறுவனம்!'...

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் இந்த கொரோனா பாதிப்பு காலத்திலும் அதன் பணியாளர்களுக்கு நல்ல செய்தி ஒன்றைக் கூறியுள்ளது.

'1.2 லட்சம் பேருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்'... 'கொரோனா காலத்திலும்'... 'குட் நியூஸ் சொன்ன பிரபல ஐடி நிறுவனம்!'...

உலகளவில் மிகவும் வெற்றிகரமான ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் இந்த கொரோனா பாதிப்பு காலத்திலும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 2.4 லட்சம் பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் பதவி உயர்வுகளை அளிக்க முடிவு செய்துள்ளது. உலகளவில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல ஒப்பந்தங்களை இந்த நிறுவனம் பெற்றுள்ள நிலையில், தங்களிடம் இருக்கும் திறமையான, அர்ப்பணிப்பு மிக்க பணியாளர்களை ஊக்கப்படுத்தி தக்க வைக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட இடையூறு காரணமாக ஏப்ரல் மாதத்தில் பதவி உயர்வு செயல்முறை நிறுத்தப்பட்டதையடுத்து  ஜூனியர் மற்றும் நடுத்தர அளவிலான ஊழியர்களுக்கு பதவி உயர்வு முக்கியமாக வழங்கப்படும் என இன்ஃபோசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ​​கொரோனா பாதிப்பால் தற்போது வீட்டிலிருந்து பணி புரிவது வழக்கமாகி விட்டதால், வாடிக்கையாளர்களும் அவுட்சோர்சிங்கை விரும்பும் நிலையில், 2021 நிதியாண்டில் 0-2% என்ற வளர்ச்சி விகித எதிர்பார்ப்புடன், தன்னை ஒத்த நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி இன்ஃபோசிஸ் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. தற்போது வளர்ச்சியை இன்னும் முன்னோக்கி எடுத்துச் செல்ல, இந்த நிறுவனம் தன் பணியாளர்களை ஒருங்கிணைக்க முயல்வதாக கூறப்படுகிறது.

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம், வேலை நிலை ஐந்து மற்றும் அதற்குக் குறைவான நிலைகளில் உள்ள பணியாளர்களுக்கான பதவி உயர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். இந்த நிலைகளில் பெரும்பாலும் 10 வருடங்களுக்கும் குறைவான பணி அனுபவம் கொண்ட ஊழியர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஃபோசிஸ் இந்த ஆண்டு தனது ஜூனியர் மற்றும் நடுத்தர அளவிலான ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் முதல் பெரிய இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக இருக்கப்போகிறது.

மூத்த நிலை ஊழியர்களைப் பொறுத்தவரை, வணிக நிலைமை வளர்ச்சியடையும்போது பதவி உயர்வுகள் பற்றி மதிப்பிடப்படும் என இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. அதேநேரம் பதவி உயர்வுகள் சிறப்பாக செயல்படும் பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு முயற்சி எனவும் அனைவருக்கும் சம்பள உயர்வு கிடைக்காது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய போட்டியாளர்களான காக்னிசண்ட் மற்றும் காப்ஜெமினி ஒரு பெரிய இந்திய இருப்பைக் கொண்டுள்ள நிலையில், அவையும் தங்கள் ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை வழங்கியுள்ளது.

இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் மற்றும் விப்ரோ ஆகிய முன்னணி ஐடி நிறுவனங்கள் கொரோனா பாதிப்பு காரணமாக புதிதாக பணிக்கு எடுப்பதை  நிறுத்திஇருந்த நிலையில், பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவையும் தாமதிக்கப்பட்டன. இது வணிகக் கண்ணோட்டத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கிய சூழலில், தற்போது வாடிக்கையாளர்கள் அவுட்சோர்சிங்கை முடுக்கிவிட்டிருப்பதால், ​​இந்நிறுவனங்கள் கல்லூரிகளுக்குச் சென்று வழக்கம் போல் இறுதி ஆண்டு மாணவர்களை பணிகளுக்கு தேர்ந்தெடுக்க தயாராகி வருவதாகவும், போட்டி நிறுவனங்களின் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை பணியமர்த்துவதன் மூலம் தங்கள் திறமைத் தளத்தில் மெதுவாக இடைவெளிகளை சரிசெய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்