'எங்க ஊழியர்கள்ல 20,000 பேருக்கு கொரோனா'... 'ஷாக் தகவலை வெளியிட்ட'... 'பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனம்!!!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்அமெரிக்காவில் தங்கள் நிறுவன ஊழியர்கள் 20,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் கொரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் அமேசான் நிறுவன ஊழியர்களில் 20,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளதென சிஎன்என், பிபிசி, டைம்ஸ் நவ் ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்த அமேசான் நிறுவனத்தின் அறிவிப்பில், "அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்த 20,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த அமெரிக்க தொகையில் குறைவுதான். எங்களை போன்ற பெரிய நிறுவனங்களும் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், பாதிப்பு எண்ணிக்கையை வெளியிட வேண்டும். இது நமக்கு உதவியாக இருக்கும்" எனக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 27 மாகாணங்களில் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 71 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மற்ற செய்திகள்