கழுதைக்கும், வரிக்குதிரைக்கும் பிறந்த ‘அரிய உயிரினம்’.. குட்டிக்கு ‘பெயர்’ என்ன தெரியுமா..? வைரலாகும் போட்டோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கழுதையும், வரிக்குதிரையும் இணைப்பால் அரிய உயிரினம் ஒன்று பிறந்துள்ளது.

கழுதைக்கும், வரிக்குதிரைக்கும் பிறந்த ‘அரிய உயிரினம்’.. குட்டிக்கு ‘பெயர்’ என்ன தெரியுமா..? வைரலாகும் போட்டோ..!

இதுகுறித்து கென்யாவில் உள்ள ஷெல்டிரிக் வனவிலங்கு அறக்கட்டளைக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அந்த குட்டி தாயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதுகுறித்த தகவலை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அதில், ‘கடந்த ஆண்டு மிகவும் ஆபத்தான பகுதியில் இருந்த வரிக்குதிரை ஒன்றை நாங்கள் கிழக்கு சாவோ தேசிய பூங்காவில் கொண்டு விட்டோம். அங்கு அந்த குதிரை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

சமீபத்தில் அந்த வரிக்குதிரை பார்த்தபோது, அதனுடன் ஒரு குட்டியை வைத்திருந்தது. பின்னர்தான் அது வரிக்குதிரையின் குட்டி என்று தெரியவந்தது. சில நாட்களுக்கு பின்பு அதன் உண்மை தன்மையை அறிந்துகொண்டோம். இந்த குட்டி ஆரோக்கியமாக வளர முடியும். ஆனால் அதனால் இன்னொரு குட்டியை ஈன முடியாது. அதற்கான சாத்தக்கூறுகளை இயற்கை வழங்கவில்லை’ என பகிர்ந்துள்ளனர். உடம்பின் மேல் பாதி கழுதையின் சாயலும், கீழே வரிக்குதிரையின் சாயலுடனும் பிறந்த இந்த அதிசய குட்டிக்கு ‘ஜாங்கி’ (Zonkey) என பெயர் வைத்துள்ளனர்.

இந்த பதிவுக்கு கீழே ஒருவர், ‘இயற்கை மிக அற்புதமானது. அந்த குட்டியும், தாயும் நலமாக உள்ளதை நினைத்து மகிழ்ச்சி’ என்றும், மற்றொருவர் ‘நான் பார்த்ததிலேயே இந்த ஜாங்கிதான் மிக கியூட்டான உயிரினம்’ என பதிவிட்டுள்ளனர்.