'குளிக்கும்போது வந்த பிரசவவலி'... 'பாத்ரூம் தரையில் பிறந்த அரச வாரிசு'... மகாராணிக்கு எத்தனையாவது கொள்ளுப் பேரக்குழந்தை தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கர்ப்பமாக இருந்த இளவரசி சாரா டிண்டாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

'குளிக்கும்போது வந்த பிரசவவலி'... 'பாத்ரூம் தரையில் பிறந்த அரச வாரிசு'... மகாராணிக்கு எத்தனையாவது கொள்ளுப் பேரக்குழந்தை தெரியுமா?

கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அங்குத் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா மகாராணிக்குக் கவலையை அளித்துள்ளது. இந்நிலையில் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும், இளவரசியுமான சாரா டிண்டாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Zara Tindall welcomes baby 'on the bathroom floor

இது இளவரசி சாரா டிண்டால் மற்றும் இங்கிலாந்து ரக்பி வீரர் மைக் டிண்டால் தம்பதியரின் 3வது குழந்தையாகும். ஏற்கனவே இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அந்த குழந்தைக்கு லூகாஸ் பிலிப் டிண்டால் என பெயரிடப்பட்டுள்ளது.

Zara Tindall welcomes baby 'on the bathroom floor

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இளவரசி சாரா டிண்டால், குளிப்பதற்காகக் குளியலறைக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென பிரசவவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அது முடியாமல் போகக் குளியலறையிலேயே இளவரசி தனது மகனைப் பெற்றெடுத்தார். லூகாஸ் பிலிப் டிண்டால்,  மகாராணி எலிசபெத்தின் 10வது கொள்ளு பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்