கட் பண்ணுங்க...! கட் பண்ணுங்க...! 'லைவ்ல நியூஸ் வாசிச்சிட்டு இருந்தவரு...' திடீர்னு 'ஆடியன்ஸை' நோக்கி சொன்ன விஷயம்...! - அதிர்ந்து போன நியூஸ் சேனல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் உள்ள கேபிஎன் செய்தி சேனலில் கன்டின்டா கலிமினா என்பவர் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
கேபிஎன் சேனலில் வழக்கம் போல லைவ் செய்தி வாசிக்கத்தொடங்கிய கன்டினா கலிமினா, தலைப்புச் செய்திகள், சர்வதேச செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தவர் திடீரென, கொஞ்ச நேரம் இந்த செய்திகளை எல்லாம் ஓரமாக வைப்போம் என ஆடியன்ஸ் நோக்கி பேச ஆரம்பித்தார்.
அப்போது, 'நாங்களும் மனிதர்கள்தான் எங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். கேபிஎன் சேனல் இங்கு யாருக்குமே ஊதியம் வழங்கவில்லை.
ஷாரோனுக்கு வழங்கவில்லை. ஏன் எனக்கும் ஊதியம் வழங்கவில்லை. எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்' எனக் கூறி நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தினார்.
சேனலில் லைவ் சென்றுக் கொண்டிருக்கும் போது கன்டினா கலிமினா அதிரடியாக பேசுவதை கவனித்த நிறுவனம் உடனடியாக லைவ் நிறுத்தி பிரேக் விட்டது. அதோடு இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது
இதுகுறித்து செய்தி வாசிப்பாளர் கன்டினா தன்னுடைய முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், 'இதுகுறித்து பெரும்பாலான பத்திரிகையாளர்கள் பேச அச்சப்படுகிறார்கள். ஆனால் நான் இதை டிவி லைவ்வில் பேசினேன். அதற்காக பத்திரிகையாளர்கள் பேசக் கூடாது என்ற அர்த்தமில்லை' எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கேபிஎன் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், 'கனிண்டா குடித்துவிட்டு செய்தி வாசித்ததால் அவ்வாறு உளறியுள்ளார். இது மிகவும் தவறான நடவடிக்கை. குடித்துவிட்டு அவர் எப்படி செய்தி வாசிக்க சென்றார் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்