Kaateri Mobile Logo Top

"ஒருத்தர் பேர கேட்டா.. அதோட வாசனை தோணும்.." மிக அரிய Syndrome.. அவதிப்படும் இளைஞர்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்த உலகில் உள்ள ஏதாவது ஒரு நபருக்கு மிக மிக அரிதான ஒரு Syndrome இருப்பது தொடர்பான விஷயம் நமக்கு எப்போதாவது தெரிய வரும்.

"ஒருத்தர் பேர கேட்டா.. அதோட வாசனை தோணும்.." மிக அரிய Syndrome.. அவதிப்படும் இளைஞர்..

அப்படி இளைஞர் ஒருவருக்கு மிக மிக அரிதான Syndrome ஒன்று இருப்பது தான், தற்போது இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது.

Henry Gray என்ற 23 வயதாகும் இளைஞர் ஒருவருக்கு மிகவும் வினோதமான அல்லது மிக மிக அரிய Syndrome ஒன்று உள்ளது.

இதனால், ஏதாவது பெயர்களை கேட்டால் அவரால் அதன் சுவையை உணரவோ, வாசனை கொள்ளவோ அல்லது அதனை உணரவோ முடியும். சிறு வயது முதலே இப்படி ஒரு விஷயத்தால் அந்த இளைஞர் அவதிப்பட்டு வருகிறார். இதற்கு lexical-gustatory synaesthesia என்று பெயர். இப்படி ஒரு அரிய வகை Syndrome இருப்பதால், ஒருவரது பெயரை கேட்டாலே, அதன் சுவை அல்லது வாசனை தான் ஹென்றிக்கு தோன்றும்.

அது மட்டுமில்லாமல், ஒரு நபரிடம் சகஜமாக பழகவோ, நட்பு கொள்ளவோ ஹென்றியால் முடிவதில்லை. ஏனென்றால், ஒரு நபரின் பெயர் மற்றும் அது குறிப்பிடும் வாசனை அல்லது சுவையைக் கொண்டு தான், அவரை ஹென்றியால் தீர்மானிக்க முடியும். உதாரணத்திற்கு ஜெனிபர் லாரன்ஸ் என்ற பெயர், ஹென்றிக்கு ஷூவில் இருந்து வரும் ஒரு வாடை போன்றது என்றும், கிர்ஸ்டி என்ற பெயர் சிறுநீர் வாசனை தொடர்பானது என்றும் ஹென்றி தெரிவிக்கிறார்.

அதனால், கிர்ஸ்டி என்ற பெயருள்ள பெண்ணிடம் ஹென்றியால் நட்பு பாராட்டவோ, அல்லது காதலிக்கவோ முடியவே முடியாது என்றும் அவர் கூறுகிறார். நம்மில் பலரும் ஒருவரின் குணம், நல்ல எண்ணம் உள்ளிட்ட விஷயங்களை பார்த்து அவரிடம் பழக நினைப்போம். ஆனால், ஹென்றிக்கோ ஒருவரின் பெயரை வைத்து மட்டும் தான், அவருடன் சகஜமாக பல முடியும் என்றும் ஒரு இக்கட்டான சூழ்நிலை உள்ளது.

இது ஒரு புறமிருக்க, தற்போது பார் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஹென்றி, அங்கு வருபவர்களின் பெயர்களை கேட்கும் போது, அவரின் சுவை மற்றும் வாசனை தான் எண்ணத்தில் வருகிறது என்பதால், அங்கே கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் ஹென்றி கூறுகிறார். அது மட்டுமில்லாமல், இந்த Syndrome என்பது, பொதுவாக மனிதர்களின் பெயர்கள் மூலம் தான் அதிகம் அவரை அதிகம் பாதிக்கிறது.

மற்ற ஆங்கில வார்த்தைகளான 'Off' என்பது அழுகிய வாசனை என்றும், 'Because' என்பது உடைந்த மர ஆடையின் கிளிப் போன்றது என்றும் ஹென்றி குறிப்பிடுகிறார். பல அருவருப்பான பெயர்கள் இருந்தாலும், Francesca, Alice, Abby, Oscar, Mitchell உள்ளிட்ட ஒரு சில பெயர்கள் சிறந்த சுவை அல்லது வாசனை கொண்டு விளங்குவதாகவும் ஹென்றி குறிப்பிடுகிறார்.

SYNDROME, NAMES, FEELING, TASTE

மற்ற செய்திகள்