Tiruchitrambalam Mobile Logo Top
Viruman Mobiile Logo top

"ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் சூடாவே இல்ல சார்".. போலீஸை அழைத்த இளைஞர்.. Spot'ல வந்து போன் பண்ணது யாருன்னு பாத்த போலீஸ்க்கு செம ஷாக்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரபல உணவகம் ஒன்றில், ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் தொடர்பாக தகராறு உருவானதால், இது தொடர்பாக போலீசாருக்கு வாடிக்கையாளர் அழைத்த நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் சூடாவே இல்ல சார்".. போலீஸை அழைத்த இளைஞர்.. Spot'ல வந்து போன் பண்ணது யாருன்னு பாத்த போலீஸ்க்கு செம ஷாக்

Also Read | தான் வளர்த்த நபர் மீது காதல்.. திருமணம் செய்து 2 ஆண்டுக்கு பிறகு.. வெளியான தகவல்!

ஜார்ஜியா நாட்டில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், Antoine Sims என்ற 24 வயது இளைஞர் ஒருவர், ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் ஆர்டர் செய்துள்ளார். தொடர்ந்து, அவருக்கு வந்த ஃப்ரைஸ், சூடே இல்லாமல் குளிர்ந்து போய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, கடையில் இருந்த ஊழியர்களிடமும் Antoine கத்தி தகராறு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், தான் ஆர்டர் செய்த ஃபிரெஞ்சு ஃப்ரைஸுக்கான ரசீதும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாகவும், கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் Antoine, அவர்கள் மன்னிப்பு கேட்டும் அமைதியாகவில்லை என கூறப்படுகிறது.

Youth call police to complain about french fries caught

இதனைத் தொடர்ந்து, அந்த உணவகத்தின் மீது புகார் ஒன்றை அளிப்பதற்காக போலீசாரின் எமர்ஜென்சி எண்ணான 911-க்கு Antoine அழைத்துள்ளார். இது தொடர்பாக விசாரிக்க, சம்பவ இடத்திற்கே போலீசார் வருகை புரிந்த நிலையில், Antoine-ஐ பார்த்ததும் அவர்கள் அனைவருக்கும் கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. புகாரை கூறுவதற்காக போலீசார் அருகே Antoine சென்ற நிலையில், அவர்கள் ஏதோ ஆவணங்களில் எதையோ எழுதுவதை கவனித்துள்ளார்.

தன்னை கைது செய்ய போகிறார்கள் என்பதை Antoine உணர்ந்த மறுகணமே, அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து கொஞ்ச தூரம் ஓடிய பிறகு, இளைஞரை போலீசார் பிடித்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் அனைத்தும், போலீசார் உடலில் மாட்டி இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.

Youth call police to complain about french fries caught

முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு, ஒரு பெண்ணின் உடலை கார் ஒன்றில் வைத்து எரித்ததற்காக Antoine உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் அழைத்த போதும் தொடர்ந்து போகாமல் இருந்த Antoine, போலீசாரிடமும் இத்தனை ஆண்டுகள் சிக்காமல் இருந்துள்ளார்.

அப்படி ஒரு சூழலில் தான், வம்படியாக போலீசாருக்கு அழைத்து, புகார் தெரிவிக்க முயன்ற சமயத்தில் வசமாக அவர்களிடமே சிக்கி உள்ளார். இது தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | ரகசிய உறவில் இருந்த ஷேன் வார்னே??.. அஞ்சு மாசத்துக்கு அப்புறம் ஆஸ்திரேலிய பெண் சொன்ன பரபரப்பு 'தகவல்'

POLICE, YOUTH, CALL, COMPLAIN, FRENCH FRIES

மற்ற செய்திகள்