பார்பி பொம்மை மாதிரி இருக்கணும்.. 50 லட்சத்துக்கு மேல செலவு.. "இவ்வளவு செஞ்சும் கடைசில இப்படி ஆகிடுச்சே".. புலம்பும் இளம்பெண்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியில் பார்பி பொம்மை போல உடல்வாகு வேண்டும் என பல அறுவை சிகிச்சைகளை செய்துகொண்ட இளம்பெண்ணிற்கு தற்போது புதிய சிக்கல் முளைத்துள்ளது.
பார்பி பொம்மை
உலகம் முழுவதிலும் பார்பி பொம்மைகள் மீதான ஆர்வம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இந்த பொம்மைகள் மீது அலாதி பிரியம் இருக்கிறது. இன்று அல்ல, 1959 ஆம் ஆண்டு இந்த பார்பி பொம்மைகள் முதன் முதலில் சந்தைக்கு விற்பனைக்கு வந்த போதிலிருந்தே உலகம் முழுவதும் இதற்கு டிமாண்ட் அதிகம். இதேபோன்ற பொம்மைகளை உருவாக்க பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன. இந்த நிலையில் பார்பி பொம்மை மீது கொண்ட ஆசையால் அதைப்போலவே மாற பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டுள்ளார் ஜெர்மனியை சேர்ந்த ஜெசிக்கா என்னும் இளம்பெண்.
விபரீத ஆசை
ஒல்லியான தேகமும், கண்ணாடி அணியும் வழக்கமும் கொண்ட ஜெசிக்காவிற்கு பார்பி பொம்மை போல மாறவேண்டும் என்ற ஆசை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கிறது. இதனால் 3 முறை மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ஜெசிக்கா. அதன்பிறகு உதடுகள், மூக்கு மற்றும் பின்பகுதியிலும் ஜெசிக்காவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதற்காக 70,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 53 லட்சம் ரூபாய்) வரை செலவு செய்ததாக கூறுகிறார் ஜெசிக்கா. இந்த பார்பி பொம்மை போன்ற உடல்வாகை பெற 3 ஆண்டுகள் ஆனதாக குறிப்பிடும் ஜெசிக்கா ஆனாலும் தான் மகிழ்ச்சியாக இல்லை என்கிறார்.
கவலை
ஜெசிக்காவின் குடும்பம் ஆரம்பம் முதலே இந்த அறுவை சிகிச்சைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். தன்னுடைய உடைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதைக்கூட பெற்றோர்களே தேர்ந்தெடுத்து வந்ததாகவும் தற்போது என்னுடைய இந்த முடிவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கவலையுடன் கூறுகிறார் ஜெசிக்கா.
இதுபற்றி அவர் பேசுகையில்," என்னுடைய போன்கால்களை அவர்கள் பிளாக் செய்திருக்கின்றனர். என்னுடைய சகோதரர் மற்றும் தாத்தா-பாட்டியை பார்க்க முடியாதது வருத்தமளிக்கிறது. பலரும் நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக நினைக்கிறார்கள். நான் அப்படி இல்லை" என்றார்.
ஜெசிக்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இதனாலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். இருப்பினும் பார்பி பொம்மை போல மாற விருப்பப்பட்டு பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்துகொண்ட ஜெசிக்கா தான் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்