கடலுக்குள்ள கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்ட Road..தொலைஞ்சுபோன அட்லாண்ஸ்டிஸ் நகரத்துக்கு வழியா?.. திகைக்க வைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியில் பிரம்மாண்ட சாலை போன்ற அமைப்பை கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இது சமூக வலை தளங்களில் பல்வேறு விதமான விவாதங்களை கிளப்பியுள்ளது.
Also Read | கல்விக்கு வயது தடை அல்ல.. 87 வயசுல 10-வது பாஸ்.. முன்னாள் முதல்வரின் விடாமுயற்சி.. குவியும் வாழ்த்துக்கள்..!
பிரம்மாண்ட சாலை
பசிபிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் கடல்சார் விஞ்ஞானிகள் குழு விசித்திரமான மஞ்சள் செங்கல் பாதையை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில் அமெரிக்காவின் பாபஹானாமோகுவாக்கியா என்ற கடற்பகுதியில் அமைந்துள்ள லிலியுகலானி ரிட்ஜ் என்னும் பகுதியை நாட்டிலஸ் என்ற ஆய்வுக் கப்பலின் குழுவினர் ஆய்வு செய்தபோது இந்த சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையை கண்டதும் ஆராய்ச்சியாளர் ஒருவர், "இது அட்லாண்டிஸுக்குச் செல்லும் பாதை” என்றும், மற்றொருவர் அதை “வினோதமானது” என்றும் குறிப்பிடுவதை வீடியோ மூலமாக அறிய முடிகிறது.
அட்லாண்டிஸ்
கிரேக்க தத்துவ ஞானியான பிளேட்டோ தனது எழுத்துக்களில் குறிப்பிட்ட மாய நகரம் தான் இந்த அட்லாண்டிஸ். இங்கே ஏராளமான எருதுகளும், வலிமையான கடற்படையும் இருந்ததாக பிளேட்டோ குறிப்பிட்டிருக்கிறார். இதுவே, அட்லாண்டிஸ் கதைகளின் பிறப்பாகும். அதனைத் தொடர்ந்து இந்த கடல் நகரம், எரிமலை சீற்றத்தால் கடலுக்கடியே மூழிகிப்போனதாகவும், பிரம்மாண்ட சுனாமியால் இந்த நகரம் அழிந்து போனதாகவும் ஏராளமான கதைகள் உண்டு.
இந்த நகரம் தற்போது அட்லாண்டிக் கடலின் கீழே மூழ்கியுள்ளதாகவும், சிலர் மத்திய தரைக்கடல் பகுதியில் இந்த நகரம் இன்னும் கடலுக்கடியே இருப்பதாகவும் கூறுவதுண்டு. ஆனால் இவை எதற்குமே போதிய சான்றுகள் கிடையாது. இப்படியான சூழ்நிலையில்தான் பசிபிக் பெருங்கடலில் இந்த பிரம்மாண்ட சாலை கண்டறியப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி
மத்திய மற்றும் மேற்கு பசிபிக் கடல் பரப்புகளின் தோற்றம் குறித்து ஆய்வில் ஈடுபட்டுவந்த இந்த குழுவினர் தான் தற்போது இந்த மஞ்சள் நிறத்திலான சாலையை கண்டுபிடித்துள்ளனர். எரிமலை வெடிப்பினால் சூடான கடற்பரப்பு பின்னர் கடல் நீரினால் குளிரடையும் நிகழ்வு தொடர்ந்து மீண்டும் மீண்டும் நடைபெற்று வந்ததால் இந்த வித்தியாசமான தோற்றம் உருவாகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் தொடர்ந்து கடலடி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் வினோத மஞ்சள் நிறத்தினாலான சாலை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்